இனி யார் அறிவுரையும் தேவையில்லை.. சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற நான் சொல்றதை செய்ங்க.. பிசிசிஐயிடம் கில் கோரிக்கை

இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடருக்கு கேப்டனாக செயல்படும் சுப்மான் கில் அடுத்ததாக நியூஸிலாந்து அணிக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடருக்கு கேப்டனாக தலைமை தாங்க இருக்கிறார். இந்த சூழ்நிலையில் அவர் டெஸ்ட் தொடர் குறித்து சில முக்கிய முடிவுகளை இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

- Advertisement -

இந்திய டெஸ்ட் அணிக்கு ரோஹித் சர்மாவின் ஓய்வுக்குப் பிறகு கேப்டனாக அறிவிக்கப்பட்ட சுப்மான் கில் சொந்த மண்ணில் நடைபெற்ற தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் காயம் அடைந்து வெளியேறினார். இருப்பினும் இந்திய அணி அந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வி அடைந்தது. இந்த சூழ்நிலையில் கில் மற்றும் பயிற்சியாளர் கம்பீர் இருவரும் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்து கொண்டிருக்கும் நிலையில் கில் தற்போது தனித்து முடிவுகள் எடுக்கும் நிலைக்கு வந்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

- Advertisement -

அதாவது இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெற வேண்டுமானால் மூன்று போட்டிகளில் மட்டுமே இனி தோல்வி அடைய முடியும். மீதமுள்ள போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற வேண்டும். இந்த சூழ்நிலையில் கில் ஒவ்வொரு டெஸ்ட் தொடர் நடப்பதற்கு முன்பாக இந்திய அணிக்கு 15 நாட்கள் கொண்ட நீண்ட பயிற்சி முகாமை நடத்த வேண்டும் என்று கேப்டன் கில் இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் அவரால் இந்திய அணியை இறுதி போட்டிக்கு தகுதி பெற வைக்க முடியும் என்று கூறியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles