அம்மாடியோ.. இதுக்கே தலை சுத்துதே.. ஷாரூக்கானை விட பல மடங்கு கொண்ட காவ்யா மாறனின் சொத்து மதிப்பு

இந்தியா ஏழை நாடாக இருப்பினும் அதன் சந்தை மதிப்பு என்பது மிகப்பெரிய அளவிலே இருக்கும். அம்பானி முதல் டாடா வரை இந்தியாவில் ஏராளமான செல்வந்தர்கள் உள்ளனர்.

- Advertisement -

பெரும்பாலான செல்வந்தர்கள் பொழுதுபோக்கில் கவனம் செலுத்தும் விதமாக கிரிக்கெட்டின் ஐபிஎல் தொடர்களில் ஏராளமான பணத்தை முதலீடு செய்து ஐபிஎல் அணிகளை வாங்குகின்றனர். இதில் சன்ரைசர்ஸ் அணியின் உரிமையாளரான காவியா மாறன் கிரிக்கெட் உலகத்தைப் பொறுத்தவரை முக்கிய நபராகவே மாறியுள்ளார்.

- Advertisement -

சென்னையில் பள்ளிப்படிப்பை முடித்த காவியா மாறன் வணிகவியலில் பட்டப் படிப்பை முடித்திருக்கிறார். மேற்கொண்டு லண்டனில் எம்பிஏ படிப்பை முடித்துவிட்டு தற்போது சன் குழுமத்தின் முக்கிய நிர்வாகியாகவும் செயல்பட்டு வருகிறார். மீடியா விமான போக்குவரத்து மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட துறைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

- Advertisement -

இவரது ஐபிஎல் அணியான சன்ரைசர்ஸ் அணி டேவிட் வார்னர் தலைமையில் 2013ஆம் ஆண்டு சாம்பியன் கோப்பையை வென்று அசத்தியது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் ஐபிஎல் தொடரில் சாம்பியன் கோப்பையை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளரான ஷாரூக் கான் அவரது சொத்து மதிப்பை கணக்கிடப்பட்ட போது அது சுமார் 6000 கோடியாக இருப்பது என்று தெரியவந்துள்ளது. திரை உலகத்தை பொருத்தவரை அதிக சொத்துக்களை கொண்ட ஒரே நடிகர் இவர் தான்.

மேலும் தனது ஐபிஎல் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலும் அதிக கோடிகளை முதலீடு செய்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐபிஎல்லில் இதுவரை மூன்று பட்டங்களை வென்று இருப்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது ஷாருக் கானையே நான்கு மடங்கு மிஞ்சும் அளவுக்கு காவியா மாறனின் சொத்து மதிப்பு இருக்கிறது. இவரது தந்தையான சன் குழுமத்தின் நிறுவனர் கலாநிதி மாறனின் சொத்து மதிப்பு சுமார் 24000 கோடி ஆகும்.

- Advertisement -

சன் குழுமத்தின் சொத்து மதிப்பு ஷாருக்கானின் சொத்து மதிப்பை விட நான்கு மடங்கு அதிகமாக உள்ளது. இது அவரை ஐபிஎல்லின் தொடர்புடைய செல்வந்தர்களில் ஒருவராகவும் ஆக்கி இருக்கிறது. ஆனால் இவர்களை மிஞ்சும் அளவுக்கு மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளரான ரிலையன்ஸ் குடும்பத்தின் நிறுவனர் அம்பானி பல்லாயிரம் கோடி சொத்துகளுக்கு சொந்தக்காரர் ஆவார்.

இதையும் படிங்க:பும்ரா ஒருத்தர் மட்டும்தான் இதை நம்புறாரு.. வேறு யாரும் இதன் மேல் நம்பிக்கை வைப்பது இல்லை.. ப்ரெட்லீ பேட்டி

ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணி தனித்து விளங்கக்கூடிய அணிகளில் ஒன்றாகும். ரோஹித் சர்மா தலைமையில் மும்பை அணி ஐந்து முறை ஐபிஎல் கோப்பைகளை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்த இடத்தில் சென்னை அணி தலா ஐந்து கோப்பைகளை வென்று அதுவும் முதல் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles