ஆர்சிபி அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் யாஸ் தயால் மொபைல் நம்பரை மாற்றி விட்டு தலைமறைவாக இருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது.
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் விளையாடியதோடு அவர் உள்நாட்டு போட்டிகள் கூட விளையாடாமல் இருந்து வருகிறார். அவரை சொந்த மாநில உத்தரப்பிரதேச கிரிக்கெட் நிர்வாகம் மற்றும் ஆர்சிபி நிர்வாகம் என யாராலும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
கடந்த ஆண்டு இளம் பெண் ஒருவர் தன்னை கிரிக்கெட்டில் முன்னேற்றுவதாக கூறி யாஸ் தயால் பாலியல் ரீதியாக பயன்படுத்தி துன்புறுத்தியதாக புகார் கொடுத்திருந்தார். இதன் காரணமாக தற்போது அவர் தலைமறைவாகியிருப்பதாக செய்திகள் கூறுகிறது.
மேலும் ஆர்சிபி அணி 20ம் தேதி துவங்கிய பயிற்சிக்கு அவர் வரவில்லை. இத்துடன் அந்த அணியின் பேருந்தில் அவர் புகைப்படம் இடம்பெறவில்லை. ஆர்சிபி அணி நிர்வாகம் அவரை ஒட்டுமொத்தமாக அணியில் இருந்து நீக்கிவிடலாம் என்று ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.

