WPL பைனல்.. 203 ரன்னுக்கு ஸ்மிருதி மந்தனா வேட்டை.. ஆர்சிபி சாம்பியன்.. டெல்லிக்கு நடந்த பரிதாபம்

இன்று பெண்கள் ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் ஜெமிமா ரோட்டரிக்யூஸ் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ஆர்சிபி அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வென்று இரண்டாவது முறையாக இந்த தொடரில் சாம்பியன் ஆனது.

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பந்து வீசியது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு லாரா வோல்வார்ட் 25 பந்துகளில் 44 ரன்கள், கேப்டன் ஜெமிமா ரோட்டரிக்யூஸ் 37 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார்கள். அந்த அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

இதைத்தொடர்ந்து விளையாடிய ஆர்சிபி அணிக்கு மூன்றாவது இடத்தில் வந்த ஜார்ஜியா வோல் 54 பந்துகளில் 79 ரன்கள், ஸ்மிருதி மந்தனா 41 பந்தில் 87 ரன்கள் எடுக்க, அந்த அணி எளிதாக நான்கு விக்கெட்டுகளை மட்டும் இழந்து இருபதாவது ஓவரில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இது ஆர்சிபி அணிக்கு இந்த தொடரில் இரண்டாவது சாம்பியன் பட்டம் ஆகும். மேலும் இந்த தொடரின் நான்கு சீசங்களிலும் இறுதி போட்டிக்கு வந்துள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இந்த முறையும் தோல்வி அடைந்து வெளியேறிய சோகம் நடந்திருக்கிறது.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles