இன்று 19ஆவது ஐபிஎல் சீசனில் முதல் போட்டியில் ஆர்சிபி மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பெங்களூர் மைதானத்தில் மோதிக் கொள்கின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் மீண்டும் தாங்கள் கோப்பையை வெல்வோம் என்று கூறியிருக்கிறார்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்திருக்கிறது. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு புதிய கேப்டனாக இஷான் கிஷான் வந்திருக்கிறார்.
இந்த போட்டியின் டாஸ் நிகழ்வில் பேசிய ரஜத் படிதார் “நாங்கள் முதலில் பந்து வீச போகிறோம். கடந்த வருடத்தில் எங்களுக்கு நிறைய பாசிட்டிவான விஷயங்கள் கிடைத்திருக்கிறது. நாங்கள் கோப்பையை தக்க வைக்க வேண்டும் என்று வரவில்லை. நாங்கள் சாம்பியன் ஆக வேண்டும் என்று வந்திருக்கிறோம்”
“இந்த முறை நாங்கள் கோப்பையை வெல்வோம் என்று நம்புகிறோம். எங்களுடைய ஜெர்சியில் இரண்டாவது ஐபிஎல் கோட்டையை வென்றதற்கு அடையாளமாக இரண்டாவது ஸ்டார் ஏறும். இந்த போட்டியில் புதுமுக வீரராக அபிநந்தன் சிங்கை களம் இறங்குகிறோம்” என்று கூறியிருக்கிறார்.

