இந்தியா டி20 கிரிக்கெட்டில் அடுத்தடுத்து களம் இறக்கும் பேட்டிங் திறமைகள் அற்புதமாக இருக்கும் என ரவிச்சந்திரன் அவர்களின் கூறியிருக்கிறார். நேற்று முகுல் சவுத்ரி விளையாடிய விதத்தை வைத்து அவர் இதை பேசியிருக்கிறார்.
நேற்று ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிராக முகுல் சவுத்ரி கடைசி நான்கு ஓவர்களுக்கு வெற்றிக்கு 54 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அபாரமாக விளையாடி வெற்றியை தேடி தந்தார்.
இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்போது “முகுல் சவுத்ரி நேற்று இரவு அசத்தலாக விளையாடினார். சேலத்தில் லக்னோ அணியுடன் இவரை வாங்குவதற்காக போட்டியில் இருந்தது யார் தெரியுமா? ராஜஸ்தான் ராயல்ஸ் அணிதான் இருந்தது. எதிர்காலத்தில் சிறப்பான திறமையான விளங்கக்கூடிய வீரரை வாங்கியதற்கு லக்னாவுக்கு பாராட்டுகள்”
“போட்டியின் முதல் பகுதிகளில் முழு காட்டிய நிதானம் மற்றும் அமைதி ஐபிஎல் என்ன என்பது குறித்து பல விதங்களில் அர்த்தப்படுத்துகிறது. ஐபிஎல் தொடர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியாவை பெரிய அளவுக்கு கொண்டு செல்கிறது. அடுத்தடுத்து டி20 உலக கோப்பைகளில் இந்தியா களம் இறக்கும் பேட்டிங் திறமைகள் பயங்கரமாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.

