”My Boy.. சாய் சுதர்சன்” அன்றே சொன்னேன்ல.. முதல் போட்டியிலேயே அசத்தல்.. தமிழக வீரரால் நெகிழ்ந்த அஸ்வின்!

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி டாஸ் வென்றதோடு, முதலில் பேட்டிங் ஆடியது. அந்த அணி 27.3 ஓவர்களில் வெறும் 116 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 16.4 ஓவர்களில் 117 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. இந்திய அணி தரப்பில் சிறப்பாக ஆடிய சாய் சுதர்சன் 43 பந்துகளில் 55 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 45 பந்துகளில் 52 ரன்களும் சேர்த்து அசத்தினர். ஆட்டநாயகன் விருதை அர்ஷ்தீப் சிங் தட்டி சென்றார்.

- Advertisement -

அதேபோல் தென்னாப்பிரிக்கா மண்ணில் கடந்த முறை விளையாடிய போது, கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணி 3 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்தது. தற்போது கேஎல் ராகுல் கேப்டனாக முதல்முறையாக ஒரு போட்டியில் வெற்றிபெற்றுள்ளார். அதேபோல் இந்திய அணிக்காக அறிமுகமான சாய் சுதர்சன் முதல் போட்டியில் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்.

- Advertisement -

தமிழ்நாட்டில் இருந்து இந்திய அணிக்காக ஆடிய 25வது வீரர் சாய் சுதர்சன். அதேபோல் தமிழ்நாட்டில் இருந்து இந்திய அணிக்காக அறிமுகமான முதல் போட்டியிலேயே அரைசதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் சாய் சுதர்சன் பெற்றுள்ளார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் வெற்றிபெற வைத்தது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இவருக்கு முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் சீனியர் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின், மொழி படத்தில் வரும் எம்எஸ் பாஸ்கர், ”Mark my words.. this boy will go places” என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருப்பார். கிட்டத்தட்ட எம்எஸ் பாஸ்கரை போலவே நானும் சாய் சுதர்சன் பற்றி தொடர்ந்து பேசி கொண்டே இருந்திருக்கிறேன்.

- Advertisement -

2021ஆம் ஆண்டு டிஎன்பிஎல் தொடரில் அறிமுகமானதில் தொடங்கி, அவர் எங்குமே நிற்கவில்லை. ரஞ்சி டிராபி, ஐபிஎல், கவுண்டி கிரிக்கெட், இந்தியா ஏ, தற்போது இந்திய அணிக்கு அறிமுகம் என்று ஆச்சரியப்படுத்தி கொண்டே இருக்கிறார். இன்னும் சிறப்பாக விளையாட வேண்டும்.. மை பாய் என்று பதிவிட்டுள்ளார். சாய் சுதர்சன் குறித்த அஸ்வினின் ட்வீட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles