நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா 38 பந்தில் 78 ரன்கள் குவித்தார். இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார்.
இந்த போட்டியில் ரோகித் சர்மா 23 பந்தில் அரை சதம் அடித்தார். இதுவே அவருடைய 19 வருட ஐபிஎல் பயணத்தில் அதிவேக அரைசதமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. அவர் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு உடல் தகுதி உடன் வந்து சிறப்பாக ஆடிக் கொண்டிருக்கிறார்.
இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது ” விராட் கோலி விளையாடுவதை பார்த்துவிட்டு வின்டேஜ் விராட் கோலி வந்துவிட்டார் 900 ரன்கள் மீண்டும் அடிக்கப் போகிறார் என்று சொன்னேன். ஆனால் ரோகித் சர்மாவை பார்த்தால் இதற்கு முன்பு எப்போதும் பார்க்காத ரோகித் சர்மாவாக இருக்கிறார்”
“பவுலர்கள் ரோகித் சர்மாவுக்கு ஷார்ட் பால் வீசக்கூடாது. அவருக்கு இப்படியான பந்தை வீச வேண்டாம் என சொல்லி ரூல்ஸ் பாலோ பண்ண சொன்னால் யாரும் கேட்காமல் பெரிய தவறு செய்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.

