தற்போதுள்ள ஆர்சிபி அணி இரண்டு ஆண்டுகளில் ஒரு ஐபிஎல் கோப்பையை வெல்வதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் உள்ளதாக இந்திய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியிருக்கிறார்.
கடந்த 18 வது ஐபிஎல் சீசனில் முதல் முறையாக ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வென்றது. தொடர்ந்து 17 ஆண்டுகளாக கோப்பையை வெல்ல முடியாமல் அந்த அணி மோசமாக இருந்து வந்தது.
இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது “இப்போது இருக்கும் ஆர் சி பி அணியை வைத்து இரண்டு ஆண்டுகளில் ஒரு ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியும். ஐபிஎல் கோப்பையை வெல்வது சாதாரண விஷயம் கிடையாது. அவர்களுடைய உள் அணி கட்டமைப்பும், ஒவ்வொரு வீரர்களுக்கும் நிகரான மாற்று வீரர்கள் இருப்பதும் இதை சாத்தியமாக்குகிறது”
“ஹேசில்வுட் சில போட்டிகளில் விளையாட முடியாமல் போவது கூட அவர்களுக்கு ஒரு வரம் போல மாறுகிறது. ஏனென்றால் சால்ட் கொஞ்சம் தடுமாறி வருகின்ற நிலையில் ஜேக்கப் பெத்தேலை அவருடன் விளையாட வைக்க முடியும். பின்பு ஹேசில்வுட் வரும்பொழுது நிலைமை எப்படி இருக்கிறது? என்பதை தெளிவாக புரிந்து கொள்ள முடியும்” என்று கூறியிருக்கிறார்.

