எழுதி வைங்க.. பாகிஸ்தான் பல்டி அடிக்கும் இந்தியா கூட ஆடும்.. முக்கிய காரணம் இதுதான் – அஸ்வின் உறுதி

இது அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்கும் என்று நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது ” டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி விளையாடும் என நான் 100% நம்புகிறேன். அடுத்த ஐந்து நாட்களுக்குள் பாகிஸ்தான் தங்களுடைய முடிவில் இருந்து பின் வாங்கிவிடும். நான் இந்த இரு அணிகளும் மோதும் போட்டியை பார்க்க ஆவலாக இருக்கிறேன்”

- Advertisement -

” மிக முக்கியமாக இந்த போட்டி நடைபெறாவிட்டால் எல்லா பக்கத்திலும் பொருளாதார இழப்புகள் ஏற்படும். பாகிஸ்தான் அணிக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதோடு ஒவ்வொரு அணிக்கும் வருவாய் இழப்பு ஏற்படும். அவர்கள் பாகிஸ்தானால்தான் தங்களுக்கு இந்த பிரச்சனை என்று ஐசிசி இடம் புகார் செய்வார்கள். அப்பொழுது பிஎஸ்எல் தொடரில் பங்கேற்பதற்கு வீரர்களுக்கு கிரிக்கெட் வாரியங்கள் அனுமதி கொடுக்காது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பெரிய அளவில் பாதிக்கப்படும்”

- Advertisement -

“மிக முக்கியமாக இரு அணிகளும் பொதுவான இடத்தில் விளையாடும் என்பதை ஏற்றுக் கொண்டு எல்லாம் தயார் ஆகிவிட்டது. இப்பொழுது ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக விளையாட முடியாது என பாகிஸ்தான் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவர்களுடைய எதிரியே அவர்கள்தான்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles