நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் இந்த வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக வேகப்பந்துவீச்சாளர் அர்ஸ்தீப்சிங் அமைந்தார்.
தனது முதல் ஓவரில் குயின்டன் டிக்காக் விக்கெட்டை வீழ்த்திய அவர், அதற்கு அடுத்து இரண்டாவது ஓவரில் ஸ்டப்ஸ் விக்கெட் வீழ்த்தி பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தார். இதனால் தென் ஆப்பிரிக்க அணி மூன்று ஓவர்களிலேயே 16 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகள் இழந்தது. இந்த சூழ்நிலையில் இனி அர்ஸ்தீப் சிங் எந்த நிலையிலும் இந்திய அணியில் இருந்து டிராப் செய்ய கூடாது என்ற ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “அர்ஸ்தீப் சிங்கை இனி எப்போதுமே டிராப் செய்யாதீர்கள். அவர் இந்திய அணியில் விளையாடக்கூடிய மிகவும் தகுதி வாய்ந்த நபர். அதை ஒவ்வொரு போட்டியிலும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார். 2019 ஆம் ஆண்டு நான் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக இருந்தபோது அவர் ஐபிஎல் தொடரில் அறிமுகமானார். அப்போது அவர் மிகவும் கண்ட்ரோல் இல்லாமல் இருந்தார். ஆனால் எப்போதுமே சண்டைக்கு தயாராக இருக்கிறேன் என்கிற மனநிலை அவரிடத்தில் உண்டு. இப்போது அவர் விளையாடும் விதம் என்னை வியக்க வைக்கிறது. மேலும் நிச்சயமாக அவரை எனது நிகழ்ச்சிக்கு வரவழைப்பேன்” எனவும் கூறி இருக்கிறார்.

