இந்திய டி20 அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா பந்தை வேகமாக அடிக்கின்ற ஒரு ஸ்லாகர் மட்டுமே என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது அமீர் விமர்சனம் செய்திருந்தார். இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் முகமது அமீர் கூறியது போல அபிஷேக் ஷர்மா கிடையாது என பதிலடி கொடுத்து பேசி இருக்கிறார்.
நேற்று ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் அபிஷேக் சர்மா மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பி வந்து 30 பந்துகளில் அதிரடியாக 55 ரன்கள் எடுத்தார். மேலும் இந்திய அணியில் தடுமாறி வந்த எல்லா வீரர்களும் சிறப்பான முறையில் ரன் எடுத்தது இந்திய அணி நிர்வாகத்திற்கு நம்பிக்கையே கொடுத்து இருக்கிறது.
இந்த நிலையில் அபிஷேக் ஷர்மா பேட்டிங் குறித்து பேசி உள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும் பொழுது “அபிஷேக் ஷர்மா வெறும் ஸ்லாகர் மட்டும் கிடையாது. அவருக்கு யுவராஜ் சிங்கை விட அதிகமான பேட் ஸ்விங் திறமை இருக்கிறது. இதன் காரணமாக அவர் பந்தைய அடித்தால் அதிக தூரத்திற்கு சென்று விழுகிறது. இதனால் அவரைப் பார்க்கும் மக்கள் ஸ்லாகர் என்று நினைத்துக் கொள்கிறார்கள்”
“உண்மையில் ஒவ்வொரு பந்தையும் அதிரடியாக விளையாட வேண்டும் என்று நினைப்பதுதான் அபிஷேக் செய்யும் குற்றமாகும். அவரிடம் யாராவது பேசினால் பந்தை டைம் செய்து விளையாடும் படி கூறுங்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.

