கோலி, ரோஹித் கிடையாது.. நடப்பு இந்திய அணியில் இவர் தான் மதிப்புமிக்க வீரர்.. இவரைக் கொண்டாடுங்கள் பிளீஸ் – ரவி அஷ்வின்

தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் கடந்த சில வருடங்களாக டெஸ்ட்டில் மட்டுமே விளையாடுகிறார். வெள்ளைப் பந்து வடிவ கிரிக்கெட்டில் பெரிதாக அவருக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அஷ்வின் தனது ஓய்வு குறித்தும் நடப்பு இந்திய அணிப் பற்றியும் பேசினார்.

- Advertisement -

நடப்பு டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலில் இருக்கிறார் அஷ்வின். 37 வயதான அவர் ஓய்வு பற்றி கூறியதாவது, ” எனக்கு ஓவ்வுக்கு பெறுவதற்கு முன் எந்த இலக்கும் இல்லை. என்னால் எப்போது விளையாட இயலவில்லை எனத் தெரிகிறதோ அப்போது உடனே விலகிவிடுவேன் ” என்றார்.

- Advertisement -

தற்போது அஷ்வின் 100 போட்டிகளில் 516 விக்கெட்டுகள் கைப்பற்றி இந்தியாவுக்கு அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் அனில் கும்ளேவுக்கு (619 விக்கெட்டுகள்) அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளார். அவரைத் தாண்ட இன்னும் 104 விக்கெட்டுகள் தேவைப்படுகிறது. 40 வயது வரை விளையாடினால் நிச்சயம் தாண்டுவார்.

- Advertisement -

நிகழ்ச்சியில் அடுத்ததாக இந்திய அணி வீரர்கள் பற்றி கேட்கப்பட்டது. நடப்பு இந்திய அணியில் யார் மிகுந்த மதிப்பான வீரர் எனக் கேட்டனர். அதற்கு அஷ்வின் ரோஹித், கோலி இருவரையும் விட்டுவிட்டு மற்றொரு வீரரைக் கூறினார். ஆனால் அவர் கூறியதில் ஆச்சர்யமும் இல்லை, நிதர்சன உண்மையாகவும் தெரிந்தது.

அவர் தேர்ந்தெடுத்த வீரர் ஜஸ்பிரித் பும்ரா. ” எப்பொழுதும் பேட்ஸ்மேன்களைத் தான் நம் நாட்டில் அதிக கொண்டாடுவார்கள். இப்போது அனைவரும் பந்துவீச்சாளர் பும்ராவைக் கொண்டுவாதைப் பார்க்கையில் சந்தோஷமாக உள்ளது. சில தினங்கள் முன்பு அவர் சென்னை வந்திருந்த போது கூட அவருக்கு ரஜினிக்கு கொடுக்கும் அளவு வரவேற்பு கொடுத்துள்ளார்கள் நம் சென்னை மக்கள். இந்த தலைமுறைக்கான பந்துவீச்சாளர் அவர், இன்னுமே அவரை அதிகம் கொண்டாடலாம். ” என்றார் அஷ்வின்.

- Advertisement -

2023 உலகக் கோப்பையில் காயம் சரியான பின்பு வந்ததில் இருந்து அவர் வேறொரு விஸ்வரூபம் எடுத்தது போல செயல்பட்டார். ஐ.பி.எலில் அவரைப் பார்த்தாலே நடுங்கினர். அதே ஃபார்மில் டி20ஐ உலகக் கோப்பையை இந்திய அணிப் பக்கம் கொண்டு வந்தவர் பும்ரா. அவருக்கு நாம் இன்னுமே பெரிய மரியாதைக் கொடுக்க வேண்டும். “

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles