விராட் ரோஹித் போய்ட்டா இனி அவ்வளவுதான்.. ஒருநாள் கிரிக்கெட்டை காப்பாத்தணும்னா இதுதான் ஒரே வழி.. அஸ்வின் கூறும் ஐடியா

ஒரு நாள் கிரிக்கெட்டை பொருத்தவரை அதன் உலகக்கோப்பை 2027 ஆம் ஆண்டு நடைபெற உள்ளதால் அதுவரை விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை அவர்கள் இருவரும் ஓய்வு பெற்று விட்டால் அதற்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட் தொடர் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அஸ்வின் கூறும் போது “ஒரு நாள் உலகக் கோப்பையை பொறுத்தவரை விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் இன்னும் சில ஆண்டுகள் விளையாடுவார்கள் என்பதால் மக்களுக்கு அதன் மீது ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் ஒரு நாள் உலக கோப்பைக்கு பிறகு இவர்கள் இருவரும் ஏறக்குறைய ஓய்வு பெற்று விடுவார்கள். அப்போது ஒரு நாள் தொடரின் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.

- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு போதிய இடைவெளி இருப்பதால் அதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் இப்போது டி20 மோகம் அதிகரித்துள்ளதால் மக்கள் அதன் மீது அதிக அளவில் ஆர்வம் காட்டுவார்கள் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். உள்ளூர் கிரிக்கெட்டில் கூட விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடுவார்கள் என்பதாலேயே அதிக அளவில் கூட்டம் கூடுகிறது. மேலும் அப்போது ஒரு நாள் கிரிக்கெட்டில் எம் எஸ் தோனி தொடக்கத்தில் நிதானமாக விளையாடி இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடுவதால் மக்கள் அதன் மீது ஈர்ப்போடு இருந்தார்கள். எனவே இதனை தடுக்க கால்பந்து போல நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு நாள் உலகக் கோப்பையை மட்டுமே நடத்த வேண்டும். இடைவெளிகளில் பிரீமியர் லீக் தொடர் நடத்தலாம் அப்படி நடத்தினால் ஒரு நாள் கிரிக்கெட்டின் மீதும் மக்களுக்கு எதிர்பார்ப்பு இருக்கும்” என்று அஸ்வின் பேசியிருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles