t20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆனது முடிவடைந்த தற்போது ஐபிஎல் திருவிழா துவங்கும் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் இந்திய அணியின் வீரர்கள் அனைவரும் தாங்கள் சார்ந்த அணிகளுக்கு சென்று பயிற்சியை துவங்க ஆரம்பித்து விட்டார்கள். இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் ஆல் ரவுண்டரான சிவம் துபே இறுதிப் போட்டி முடிந்து ரயிலில் பயணம் செய்தது குறித்து இந்திய முன்னால் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று டி20 உலக கோப்பையை மூன்றாவது முறையாக கைப்பற்றி வரலாறு படைத்தது. இந்த சூழ்நிலையில் இறுதி நேரத்தில் சிவம் தூபே விமானத்தை தவறவிட, குஜராத்தில் இருந்து மும்பைக்கு ரயில் வழியாக பயணம் செய்வது பெரிய பேசு பொருளாக மாறியது. இந்த சூழ்நிலையில் இது குறித்து தற்போது கருத்து தெரிவித்திருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் இது ஒரு பெரிய விஷயமே கிடையாது ஆனால் தற்போதைய ஊடகங்கள் இதனை பெரிது படுத்துகின்றன என்று பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும் போது “சிவம் துபே ரயிலில் பயணம் செய்த செய்திகள் குறித்து நான் பார்க்கிறேன். ஆனா உண்மையை சொல்ல வேண்டுமென்றால் அந்த மாதிரி செய்திகள் படிக்க எனக்கு விருப்பம் கிடையாது. இதில் என்ன அவ்வளவு பெரிய விஷயம் இருக்கிறது? நானும் தான் ரயிலில் பயணம் செய்திருக்கிறேன். ஒரு கிரிக்கெட் வீரர் ரயிலில் பயணம் செய்வதை இவ்வளவு பெரிதாக பேச வேண்டிய அவசியம் கிடையாது” என்று அஸ்வின் பேசியிருக்கிறார்.

