சூர்யா அவுட் ஆனது தான் ரொம்ப சரி.. ஒருவேளை அவர் நின்று இருந்தால் அது இந்திய அணியை பாதித்திருக்கும் – அஸ்வின் கூறும் கருத்து

நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனான சூரியகுமார் யாதவ் பல இன்னிங்ஸ்களுக்குப் பிறகு 22 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார். கொஞ்சம் விரைவாகவே வெளியேறினாலும் அவரது பேட்டிங்கில் நேற்று சிறிய நம்பிக்கை காணப்பட்டது.

- Advertisement -

இது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்போது ” நேற்று இந்திய கேப்டனுக்கு கிடைத்த ரன்கள் அவருடைய மனதில் இருந்து பெரிய அழுத்தத்தை வெளியேற்றி இருக்கும் என்று நினைக்கிறேன். அவருடைய பேட்டிங் ஃபார்ம் மற்றும் அணுகுமுறை குறித்து நிறைய பேர் வெளியே பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் டி20 கிரிக்கெட்டில் ஒரே மாதிரியாக விளையாடிக் கொண்டே இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. எனக்கு பிடித்த விஷயம் என்றால் நேற்று அவர் நல்ல டச்சில் இருந்தார்.

- Advertisement -

சிறப்பாக ஆரம்பித்து விளையாடினார். அவர் ஒரு பேட்ஸ்மேன் ஆக மேற்கொண்டு அதே முறையில் விளையாடி அரை சதம் அடித்திருக்கலாம். ஆனால் அவர் அப்படி நினைக்காமல் அதிரடியாக விளையாட வேண்டும் என்று ஆட்டம் இழந்தார். இந்திய t20 அணிக்கு என்று ஒரு தீம் இருக்கிறது. இந்த அணியின் அனைவருமே அதிரடியாக விளையாட வேண்டும் என்று நினைக்கிறார்கள். எனவே கேப்டனும் அதேபோல விளையாட நினைத்து ஆட்டம் இழந்து இருக்கிறார். எனவே இது சரியானது தான். அனைவரும் அப்படி விளையாட கேப்டன் நிதானமாக நின்றால் அது அணியின் நிலைத்தன்மையை சற்று பாதிக்கும்” என்று அஸ்வின் பேசியிருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles