நாளையுடன் 2025 ஆம் ஆண்டு முடிவடைய உள்ள நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், இந்த ஆண்டு இந்திய அணிக்காக பங்காற்றிய இரண்டு சிறந்த வீரர்களை தேர்வு செய்து இருக்கிறார்.
பந்துவீச்சில் வருண் சக்கரவர்த்தி மற்றும் பேட்டிங்கில் அபிஷேக் ஷர்மா ஆகிய இருவரையும் தேர்வு செய்து அதற்கான காரணத்தை கூறியிருக்கிறார். இது குறித்து அவர் கூறும் போது “இந்திய அணியை பொறுத்தவரை பவுலிங் நம்பர் ஒன் பௌலராக இருக்கும் வருண் சக்கரவர்த்தியை இந்த ஆண்டின் சிறந்த பவுலராக நான் தேர்வு செய்கிறேன். அவர்தான் தற்போதைய நம்பர் ஒன் பந்துவீச்சாளர். ஆனால் இத்தகைய நிலை அவருக்கு எளிதாக கிடைக்கவில்லை.
ஒவ்வொரு படியும் தன்னை உயர்த்தி இப்படி ஒரு சிறந்த நிலைக்கு வந்திருக்கிறார். அதற்காக அவர் போட்டுள்ள உழைப்பு என்பது ஏராளம். அதேபோல பேட்டிங்கில் நான் அபிஷேக் ஷர்மாவை தேர்வு செய்கிறேன். அவரது அதிரடியாக ஆடும் திறமை இந்திய அணிக்கு பன்மடங்கு பலத்தைக் கூட்டி உள்ளது. மேலும் அவர் விரைவாக ஒருநாள் கிரிக்கெட்டிலும் தடம் பதிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என அவர் பேசியிருக்கிறார்.

