ஐபிஎல் 2026.. ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் நான்கு அணிகள் எவை எவை.? முன்னாள் சிஎஸ்கே வீரர் அஸ்வின் கணிப்பு

நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்த ஐபிஎல் மினி ஏலத்தில் அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை எடுத்து ஐபிஎல் தொடருக்கு தயாராகிவிட்டன. இந்த சூழ்நிலையில் ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்களை வைத்து எந்த நான்கு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்பதை ரவிச்சந்திரன் அஸ்வின் கணித்துள்ளார்.

- Advertisement -

தனது யூட்யூப் சேனலுக்கு பெட்டி அளித்த ரவிச்சந்திரன் அஸ்வின், முதல் அணியாக நடப்புச் சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை தேர்வு செய்து இருக்கிறார். இருப்பினும் ஜாஸ் ஹேசில் வுட் மற்றும் யஸ் தயால் இருவரும் விளையாடுவது முக்கியம் என்று கூறியிருக்கிறார். அடுத்ததாக கடந்த தொடரில் இறுதிப் போட்டி வரையும் முன்னேறிய ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை தேர்வு செய்திருக்கிறார்.

- Advertisement -

மூன்றாவதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை அஸ்வின் தேர்வு செய்ததற்கான காரணம், ரவீந்திர ஜடேஜா மற்றும் ஷாம் கரண் போன்ற முன்னணி வீரர்கள் அந்த அணியில் இணைந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் சில சிறந்த வீரர்களையும் இந்த மினி ஏலத்தில் தேர்வு செய்துள்ளனர். நான்காவதாக மும்பை இந்தியன்ஸ் அணியை தேர்வு செய்து இருக்கிறார். டி காக் மற்றும் டிரேடிங் முறையில் தரமான வீரர்களை தேர்வு செய்தது காரணம் என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles