தம்பிங்களா கேளுங்க.. பவர் பிளேவில் நியூசி இந்த பிளான்தான் போடும்.. அதை இப்படி உடைங்க – அஸ்வின் அறிவுரை

நாளை குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடப்பு டி20 உலக கோப்பையின் இறுதி போட்டி இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பவர் பிளேவில் நியூசிலாந்து அணியின் திட்டங்கள் எப்படி இருக்கும் என்றும்? அதை உடைப்பதற்கு இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் என்ன செய்ய வேண்டும்? என்றும், இந்திய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சில முக்கிய ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார்.

- Advertisement -

நியூசிலாந்து அணி பவர் பிளேவின் முதல் ஓவரை வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றிக்கு கொடுக்கிறது. இரண்டாவது ஓவரை சுழல் பந்துவீச்சாளர் மெக்கான்ஸிக்கு கொடுக்கிறது. இவர் வலதுகை பேட்ஸ்மேனுக்கு லெக் ஸ்பின், இடது கை பேட்ஸ்மேனுக்கு ஆப் ஸ்பின் வீசுகிறார். செமி பைனலில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக இவர் கொடுத்த திருப்புமனை மிக முக்கியமாக இருந்தது.

- Advertisement -

இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது ” இந்த மெக்கான்ஸி திட்டங்களை செயல்படுத்துவதில் மிகவும் புத்திசாலி. அவர் அபிஷேக் ஷர்மாவை லெக் சைடிலும், இஷான் கிஷானை ஆப் சைடிலும் அடிக்க விடமாட்டார். எனவே நாம் இவர்களுக்கு எதிராக என்ன மாதிரியான திட்டங்கள் வைத்திருக்கிறோம் என்பது மிகவும் முக்கியமானது”

- Advertisement -

“முதலில் அபிஷேக் ஷர்மா ஒரு சிங்கிள் எடுத்து இந்த ஆப் ஸ்பின்னரை அடிக்கச் சொல்லி சஞ்சு சாம்சன் இடம் செல்ல வேண்டும். இதுதான் போட்டியில் விக்கெட் விழாமல் ஆரம்பிப்பதற்கு சிறந்த வழியாக இருக்கும். மேலும் இந்த போட்டியில் இந்திய காப்பாற்ற பேட்ஸ்மேன்கள் ஆட்ட விழிப்புணர்வுடன் சிறப்பாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles