விராட் கோலியிடம் மனம் திறந்து பேசினேன்.. தன்னைத் திட்டிய ரசிகருக்கு நன்றி சொல்லிய அஸ்வின் – முழு விபரம்

இந்திய கிரிக்கெட்டின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த விராட் கோலி கடந்த 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையோடு டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதற்குப் பின்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்ற அவர் தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மற்றும் தொடர்ந்து விளையாடி வருகிறார். இந்த சூழ்நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் சமீபத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான t20 தொடர் குறித்து பேசி இருந்தார்.

- Advertisement -

அதில் தற்போதைய டி20 கிரிக்கெட்டில் 160 முதல் 170 ரன்கள் என்பது பயனற்றது என்று பேசியிருந்த அஸ்வின் கடந்த டி20 உலக கோப்பையில் பும்ரா மற்றும் சூரியகுமார் யாதவ் இருவரும் இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்ற முக்கிய அங்கம் வகித்தார்கள் என்று பேசி இருந்தார். இதில் விராட் கோலி இறுதிப்போட்டியில் அடித்த 78 ரன்கள் குறித்து அஸ்வின் எதுவும் கருத்து தெரிவிக்காத நிலையில் சமூக வலைதளத்தில் ரசிகர் ஒருவர் அஸ்வினை விமர்சித்து பேசி இருந்தார்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் அதை கவனித்த அஸ்வின், விராட் கோலியிடம் இந்த ரசிக சண்டை குறித்து மனம் திறந்து அவரிடம் பேசி சிரித்ததாகவும் சமூக வலைதளம் ரசிக சண்டைகளில் எப்படி மாறி இருக்கிறது என்று அவரிடம் விவரித்ததாகவும் ரவிச்சந்திரன் அஸ்வின், சமூக வலைதளத்தில் தனது கருத்தினை பதிவு செய்து இதன் மூலமாக விராட் கோலியிடம் தான் பேசியதற்கு அந்த ரசிகரிடம் நன்றி தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles