100, 200னு அடிச்சு என்ன யூஸ்.? எதிர் அணிகளைப் பற்றி நாம் கொஞ்சமாவது நினைத்து பார்க்கிறோமா?. அஸ்வின் ஆதங்கம்

நேற்று நடைபெற்ற விஜய் ஹசாரே உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் ராஞ்சியில் நடைபெற்ற ஆட்டத்தில் பீகார் மற்றும் அருணாச்சல பிரதேச அணிகள் விளையாடின. இதில் விளையாடிய பலமான பீகார் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 574 ரன்கள் என அடித்து நொறுக்கியது.

- Advertisement -

இதனால் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ஒரு அணி ஒரு நாள் தொடரில் அடித்த அதிகபட்ச ரன்னாக இந்த ஸ்கோர் உலக சாதனை படைத்தது. இதற்கு முக்கிய காரணமாக பீகார் அணியின் துவக்க ஆட்டக்காரரான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்சி 84 பந்துகளில் 190 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றினார். இந்த சூழ்நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் இது குறித்து சில முக்கிய கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “சில அணிகள் தரத்தில் தலைகீழாக இருப்பதால் அங்கு சிறந்த போட்டிகள் என்பது நடைபெறுவது கிடையாது. நீங்கள் உங்கள் உறவினர் அணிக்கு எதிராக பெரிய ஸ்கோர் அடித்தாலும் அது பெரிய ஸ்கோராகவே கருதப்படும். மேலும் இரட்டை சதம் அடித்தாலும் அதுவும் பெரியதாக கருதப்படும். அருணாச்சலப் பிரதேசம் போன்ற அணிகள் நல்ல அணிகளாக வளர்வதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட போட்டிகள் அவர்களது தன்னம்பிக்கையை என்ன செய்யும்? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். வைபவ் சூர்யவன்சி அண்டர் 19 ஆசிய கோப்பை தொடரில் பெரிய அளவில் சாதித்தாலும் பாகிஸ்தான் போன்ற பலமான அணிக்கு எதிராக இறுதிப் போட்டியில் குறைந்த ரன்னில் ஆட்டம் இழந்தது கோப்பையை இழந்ததற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles