வலை பயிற்சியில் செய்யும் அதை ஜடேஜா போட்டியில் பயன்படுத்தவே மாட்டார்.. அதுதான் இப்போ பிரச்சனை – அஸ்வின் கருத்து

நடைபெற்று முடிந்த இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து அணிக்கு இரண்டு போட்டிகள் வெற்றி பெற்று முதல் முறையாக இந்திய மண்ணில் ஒரு நாள் தொடரை வெற்றி பெற்று சாதனை படைத்தது. இதில் முக்கியமாக ஆல் ரவுண்டர் ரவிந்திர ஜடேஜாவின் பங்களிப்பு மோசமானதாக அமைந்தது.

- Advertisement -

ஜடேஜா எப்போதும் பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வீரர். ஆனால் இந்தத் தொடரில் பேட்டிங் மட்டுமல்லாமல் பந்து வீச்சில் ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியவில்லை. இது அவரது சரிவுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் இது குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் சில முக்கிய கருத்துகளை பேசி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் போது “ஜடேஜா எப்போதுமே ஒரு சிறந்த லெஜெண்ட் வீரர். பேட்டிங், பௌலிங் மற்றும் பீல்டிங் என அனைத்து துறைகளிலும் சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்தக் கூடிய ஒரு வீரர். எது அவரது பலமாக உள்ளதோ அதுவே சில சமயங்களில் அவரது பலவீனமாகவும் மாறிவிடுகிறது. அதாவது ஜடேஜா இதைத் தாண்டி எதையும் பெரிதாக முயற்சி செய்து பார்க்க மாட்டார். ஆனால் இனி அப்படி இல்லாமல் அவர் ஏதேனும் புதிதாக ஒன்றை முயற்சிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஜடேஜா வலைகளில் கேரம் பந்துகளை வீசி பயிற்சி செய்வதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் அவர் போட்டிகளில் அதை ஒருபோதும் பயன்படுத்துவதில்லை” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles