ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கு சுழற் பந்துவீச்சாளர் நேதன் லயன் விளையாடவில்லை. இந்த சூழ்நிலையில் இது குறித்து அவர் தனது கருத்துக்களை வெளிப்படையாக பேசிய போது ரவிச்சந்திரன் அஸ்வின் அது இந்தியாவில் இருந்தால் நிலைமை தலைகீழாக மாறிவிடும் என்று சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் நேதன் லயன் இருவருமே டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் வீழ்த்திய ஜாம்பவான் பந்துவீச்சாளர்கள். இதில் அஸ்வின் ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டார் மேலும் லயன் மட்டுமே விளையாடி வருகிறார். இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளிலும் தனக்கு வாய்ப்பு கிடைக்காதது குறித்து வெளிப்படையாகவே தனக்கு வருத்தமாக இருக்கிறது என்று பதில் அளித்தார்.
இந்த சூழ்நிலையில் இது குறித்து அஸ்வின் பேசும்போது “லயன் தமது கருத்துக்களை வெளிப்படையாக பேசியதை பார்த்தேன். இது ஆஸ்திரேலிய அணிக்கு எந்தவிதமான வருத்தமும் அடைந்ததாக தெரியவில்லை. அவர் வருத்தத்தின் உச்சியில் இருந்ததால் தான் இப்படி பேசினார். அதுவே இந்தியாவில் நான் இது போன்ற கருத்துக்களை வெளிப்படையாக பேசி இருந்தால் எனது நிலைமை என்னவென்று தெரியவில்லை. அடியிலிருந்து நீக்கக்கூடிய அபாயமும் ஏற்படலாம்” என்று தனது வருத்தத்தை பதிவு செய்திருக்கிறார்.

