நேற்று தொடங்கிய இந்திய உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே டிராபியில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் அவர்கள் சார்ந்த அணிகளுக்காக விளையாடி வெற்றி பெற வைக்க முக்கிய காரணமாக அமைத்தனர். இந்த சூழ்நிலையில் அந்த போட்டிகளை நேரலையில் ஒளிபரப்பாததற்கு அதற்கான காரணத்தை ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியிருக்கிறார்.
பல வருடங்களுக்குப் பிறகு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட முடிவெடுத்து விஜய் ஹசரே டிராபியில் இரண்டு போட்டிகளில் விளையாட முடிவு செய்திருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் ரோகித் சர்மா சிக்கிம் அடுக்கு எதிராக 155 ரன்கள் குவித்து மும்பை அணி வெற்றி பெறுவதற்கும், ஆந்திர அணிக்கு எதிராக விராட் கோலி 131 ரன்கள் குவித்து டெல்லி அணி வெற்றி பெறுவதற்கும் காரணமாக அமைந்தனர். இந்த சூழ்நிலையில் இந்தியாவின் பிரபலமான ஒளிபரப்பு நிறுவனங்களான ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இந்த போட்டிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்யவில்லை.
முக்கிய வீரர்கள் விளையாடும் போட்டிகளை கூட ஒளிபரப்ப முடியாதா? என்று ரசிகர்கள் இந்த சேனல்களை விமர்சனம் செய்ய அதற்கு ரவிச்சந்திரன் அஸ்வின் பதில் அளித்திருக்கிறார். இது குறித்து அவர் பேசும் போது “எலான் மஸ்கால் மட்டும் ட்விட்டரில் அனைத்து போட்டிகளையும் ஒளிபரப்ப முடியுமா? என்று ரசிகர்கள் கேட்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் அனைவரும் ரோகித் மற்றும் விராட் கோலியை பின்பற்ற விரும்புகிறார்கள். விராட் கோலி மற்றும் ரோஹித் இருவரும் விளையாடும் போட்டிகள் முன்கூட்டியே தெரிந்தால் தான் ஒளிபரப்பு சேனல்களும் அதற்கு தயாராக முடியும். மேலும் அவர்கள் இருவருமே விளையாடுவது குறித்து கடைசி நேரத்தில் முடிவெடுத்த காரணத்தினால் தான் பிசிசிஐயால் இதற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுக்க முடியவில்லை” என்று பேசி இருக்கிறார்.

