நேற்று தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த போட்டியில் இந்திய அணியின் துணை கேப்டன் அக்சர் படேல் விளையாட வைக்கப்படவில்லை. இது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் விமர்சனம் செய்திருக்கிறார்.
இந்தத் தென் ஆப்பிரிக்க அணியின் பிளேயிங் லெவனில் பேட்டிங் யூனிட்டில் மூன்று முக்கியமான இடதுகை வீரர்கள் இருக்கிறார்கள். இதன் காரணமாக அவர்களுக்கு பந்தை வெளியே திருப்பும் வாஷிங்டன் சுந்தர் தேவை என கம்பீர் அக்சர் படேலை நீக்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது ” அக்சர் படேல் யாருக்கும் தாழ்ந்த வீரர் கிடையாது. அவர் இந்திய டி20 அணிக்கு செய்திருக்கும் பங்கை யாரும் மறக்க கூடாது. இது ஐபிஎல் தொடர் இல்லை. ஐபிஎல் தொடராக இருந்தால் 14 போட்டிகள் இருக்கும் எந்த பேட்ஸ்மேனுக்கு எந்த பவுலரை வைத்து விளையாடலாம் என்று யோசிக்கலாம். சர்வதேச கிரிக்கெட்டில் உங்களுக்கு நிரந்தரமான அணி வேண்டும்”
“இதே தென் ஆப்பிரிக்க அணிக்கு அக்சர் படேல் டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடி இருந்தார். விராட் கோலி உடன் இருந்திருந்தாலும் அவரது பேட்டிங் சிறப்பாக அமைந்திருந்தது. நேற்று இதே போல மிடில் வரிசையில் கொஞ்சம் நிலைத்தன்மை இருந்திருந்தால் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கும்” என்று கூறி இருக்கிறார்.

