ரச்சின் ரவீந்திரா தொடர் நாயகன் விருதுக்குத் தகுதியே இல்லை.. இந்த இந்திய வீரருக்கு தான் நியாயமா பார்த்தா கொடுத்து இருக்கணும் – அஷ்வின் அதிரடிப் பேச்சு

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் வெற்றியாளர்களாக இந்திய அணி நேற்று பட்டம் சூடியது. நியூசிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடர்ந்து 2வது ஐசிசி கோப்பையை கைப்பற்றி சர்வதேச கிரிக்கெட்டில் ரோஹித் & கோ ஆதிக்கதைச் செலுத்தியுள்ளனர்.

- Advertisement -

நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரை என்னதான் இந்திய அணி கைப்பற்றி இருந்தாலும், அதிக ரன்கள் குவித்ததற்காக கோல்டன் பேட் ரச்சின் ரவீந்திராவுக்கும், பவுலிங்கில் கோல்டன் பால் மேட் ஹென்ரிக்கும் கொடுக்கப்பட்டது. மேலும் தொடரின் நாயகனாக இளம் நட்சத்திரம் ரச்சின் ரவீந்திரா தேர்வு செய்யப்பட்டார்.

- Advertisement -

4 போட்டிகளில் விளையாடிய ரச்சின் ரவீந்திரா பேட்டிங்கில் 2 சதங்கள் உட்பட மொத்தம் 263 ரன்கள் குவித்தார். மேலும் 3 விக்கெட்டுகளையும் எடுத்து பவுலிங்கிலும் பங்காற்றியுள்ளார். இதனால் அவர் தொடரின் நாயகனாக அறிவிக்கப்பட்டார். ஆனால் இந்த முடிவுக்குத் தான் மாற்றுக் கருத்தை ரவிச்சந்திரன் அஷ்வின் தெரிவித்துள்ளார். ரச்சினுக்குப் பதிலாக தகுதியான இந்த இந்தியா வீரருக்குத் தான் விருது கொடுத்திருக்க வேண்டுமெனக் கூறியுள்ளார்.

- Advertisement -

அவர் கூறியதாவது, ” யார் என்ன சொன்னாலும் சரி, ஆனால் என்னைப் பொறுத்தவரை தொடர் நாயகன் விருது வருண் சக்ரவர்த்திக்குத் தான் கொடுத்திருக்க வேண்டும். இந்திய அணியின் எக்ஸ் – ஃபேக்டராக அவர் விளங்கினார். அவர் இல்லையென்றால் இந்திய அணியின் போட்டி முடிவுகளே மாறி இருக்கும். இன்னும் சொல்லப் போனால் அவரும் அனைத்துப் போட்டிகளையும் விளையாடவில்லை. “

” யார் ஒருவரிடம் போட்டியின் தன்மையை மாற்றி அமைக்கும் பலம் இருக்கிறதோ அவரே தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட வேண்டும். நான் நடுவராக இருந்து இருந்தால் நிச்சயம் வருண் சக்ரவர்த்தியைத் தான் தேர்ந்தெடு இருப்பேன். ” எனக் கூறினார் அஷ்வின். வருண் சக்ரவர்த்தி 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வெறும் 3 போட்டிகளில் மட்டுமே விளையாடி 9 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இதில் ஒரு 5 விக்கெட் ஹால் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles