நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில், இந்திய மண்ணில் நியூசிலாந்து அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, தொடரை 3-0 எந்த கணக்கில் இந்திய அணியை ‘ஒயிட் வாஷ்’ செய்தது.
2000-க்கு பிறகு இரண்டுக்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியாவை ‘ஒயிட்வாஷ்’ செய்து, கடந்த 24 ஆண்டு வரலாற்று மைல்கல்லை மாற்றி அமைத்த அணியாக நியூசிலாந்து அணி பதிவு செய்தது.
இந்நிலையில் நியூசிலாந்து டெஸ்ட் தொடர் தோல்வி குறித்து, இந்திய அணியின் ஆப் ஸ்பின்னரான ரவிச்சந்திரன் அஸ்வின், “எங்களால் இந்த தோல்வியிலிருந்து மூன்று நான்கு நாட்கள் மீண்டு வர முடியவில்லை….” என்று கூறி தன் மௌனத்தை கலைத்துள்ளார்.
என் மேலும் தவறு இருக்கிறது:
இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடியூப் வீடியோ ஒன்றில் கூறியதாவது, “நியூசிலாந்து அணியிடம் 3-0 என்ற தோல்வியானது. இந்திய வரலாற்றில் இதுவரை நடந்ததில்லை என்று நான் படித்தேன். அதற்கு நான் எப்படி பதில் அளிப்பது என்று எனக்கு தெரியவில்லை.
என் வாழ்க்கை மற்றும் கிரிக்கெட் ஆகிய இரண்டு இடங்களிலும் நான் அதிக உணர்ச்சிகளைக் கொண்டிருப்பதில்லை. ஆனால் இந்த நிகழ்வானது எனக்கு மிகவும் வேதனையான அனுபவமாய் இருந்தது. ‘வேதனையான அனுபவம்’ என்ற சொல் தான், இந்த தொடருக்கான பொருத்தமான சொல்லும் கூட. கடந்த இரண்டு மூன்று நாட்கள் எனக்கு எப்படி பதில் அளிப்பது மட்டும் எப்படி எதிர்கொள்வது என்று கூட தெரியவில்லை”.
மேலும் அவர் கூறுகையில், “நான் என்னிடமிருந்து நிறைய எதிர்பார்த்தேன். நானும் இந்த தோல்விக்கு மிகப்பெரிய காரணம் தான். என்னால் கீழ் பேட்டிங்கில் ஒழுங்காக பங்களிக்க முடியவில்லை. ஒரு பந்துவீச்சாளராக, ரன்களை சேகரிப்பது என்பது எவ்வளவு முக்கியமானது என்று எனக்குத் தெரியும். பல இடங்களில் நான் சிறப்பாக தொடங்கினேன், ஆனால் சில சமயங்களில் அதை வீணாக்கிவிட்டேன். நான் என்னால் முடிந்த முயற்சியே மேற்கொண்டேன், ஆனால் அது போதுமானதாக அமையவில்லை” என்று கூறி முடித்தார்.

