விராட் கோலிக்குப் பின் கில்லா ? அவரை பிரின்ஸ் என அழைப்பது எல்லாம் வியாபாரத்துக்காக.. இதனால் வாய்ப்பு பறிப்பு.. உண்மையை உடைத்த அஷ்வின்

சென்னை பையன் ரவிச்சந்திரன் அஷ்வின் சமீபத்தில் இந்திய துவக்க வீரர் ஷுப்மன் கில் பற்றியும் அவரின் பெயரை வைத்துச் செய்யும் வியாபாரத்தையும் பற்றி ஒப்பனாகப் பேசியுள்ளார்.

- Advertisement -

இந்தியா – வங்கதேசம் இடையேயான முதல் டெஸ்ட் அண்மையில் சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. சரிவில் இருந்த இந்திய அணியை அஷ்வின் அபார சதம் விளாசி மீட்டார். பின்னர் பவுலிங்கிலும் 6 விக்கெட்டுகள் என ஆல்ரவுண்ட் பெர்பார்மன்ஸ் செய்து அசத்தி ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.

- Advertisement -

இதனைப் தொடர்ந்து, சொந்த ஊரான சேப்பாக்கம் மைதானத்தில் இத்தகு அசத்தலான ஆட்டத்தை ஆடிய அனுபவம் குறித்துப் பேசினார் அஷ்வின். அந்த நேர்காணலில் இந்திய வீரர் கில்லுக்கு கொடுக்கப்பட்டுள்ள பிரின்ஸ் பட்டம் குறித்து என்ன நினைக்கிறீர்கள் எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

- Advertisement -

அதற்கு அஷ்வின், ” அவரை இப்படி இந்திய அணியின் பிரின்ஸ் என அழைப்பது வெறும் வியாபாரத்துக்கு மட்டுமே. எனக்கு இதிலெல்லாம் ஆர்வம் இல்லை. வியாபாரத்துக்காக இவ்வாறு பிரின்ஸ் என மார்கெட்டிங் செய்வது ஒரு அளவு வரை ஓகே. ஆனால் அதுவே மற்றொரு வீரரின் வாய்ப்பைப் பறிக்கும் பட்சத்தில் இருப்பது தவறு. “

” மற்றப்படி ஷுப்மன் கில் திறமையான இளம் வீரர். அவருக்கு பெரிய எதிர்காலம் உள்ளது என்பதை மறுக்கவே முடியாது. ” என அஷ்வின் வெளிப்படையாக மார்கெட்டிங் பற்றி பேசிவிட்டார். பல மாதங்களாக இது குறித்து ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பேசிக் கொண்டுதான் உள்ளார்கள்.

- Advertisement -

சச்சினுக்குப் பிறகு விராட் கோலி வந்தது போல, இப்போது விராட் கோலிக்குப் பிறகு அந்த இடத்தை நிரப்ப கில் உள்ளார் என மார்கெட்டிங் செய்யப்பட்டு வந்தது, இப்போதும் நடந்துக் கொண்டுள்ளது. இதற்கு பிசிசிஐ கூட ஒரு வகையில் ஒத்துழைப்பு அளிப்பது போல கில்லுக்கு அத்தனை சிபாரிசுகள் செய்வதாக சமூக வலைத்தளத்தில் கிரிக்கெட் ரசிகர்களிடையே வாக்குவாதம்.

கில் திறமையான வீரர் தான். அண்மையில் நடந்த டெஸ்ட்டில் அதிரடியான சதம் விளாசினார். கடிசிஸ் 8 இன்னிங்சில் நன்றாகவே விளையாடியுள்ளார். ஆனால் வியாபாரத்துக்காக ஒரு அளவு மேல் விளம்பரம் செய்வதைத் தான் குறை சொல்வதாக உள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles