நாளை இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகள் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது சுற்று போட்டியில் மோத இருக்கின்றன. ஒட்டுமொத்தமாக இந்திய அணி எப்படி இருக்கிறது என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசியிருக்கிறார்.
தற்போது இந்தியா தென் ஆப்பிரிக்கா என இரண்டு அணிகளுமே பேட்டிங் யூனிட்டில் வலிமையாக உள்ளன. இதன் காரணமாக போட்டி கடைசி ஓவர் வரையில் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயத்தில் அபிஷேக் ஷர்மா இந்த போட்டியில் ஆவது தனது முதல் ரன்னை எடுப்பாரா என்கின்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.
இதுகுறித்து ரவி சாஸ்திரி பேசும்பொழுது ” அபிஷேக் ஷர்மா மூன்று டக்கவுட்டுகள் தொடர்ந்து என்னை பொருத்தவரையில் இந்திய அணிக்கு நல்ல விஷயம்தான். ஏனென்றால் அவர் முக்கியமான பெரிய போட்டிகளில் விளையாடுவதற்கான தன்னுடைய தலைசிறந்த ஆட்டத்தை சேமித்து வைத்திருக்கிறார் என்று அர்த்தம். அவர் ரன் எடுக்காதது குறித்து எதிரணிகள் உண்மையில் கவலைப்படும்”
“அடுத்து தற்போது விளையாடக் கொண்டிருக்கும் அணியில் நிறைய பந்து வீச்சு விருப்பங்கள் இருக்கின்றன. மேலும் யாராவது ஒருவர் ஒரு போட்டியில் சிறப்பான பங்களிப்பை கொடுக்கிறார்கள். திலக் நல்ல பங்களிப்பை சராசரியாக கொடுக்கிறார் ஆனாலும் அவரிடமிருந்து இன்னும் பெரிதாக ரன் வரவேண்டும். இந்த காரணத்தால் அணியை மாற்ற மாட்டார்கள்” என்று கூறியிருக்கிறார்.

