அபிஷேக்கை நீக்கி கம்பீர் போடும் புது பிளான்.. ஒப்புக்கொள்ளாத ரவி சாஸ்திரி.. வெளியான புதிய செய்திகள்

தற்போது இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா நல்ல பேட்டிங் பார்ம் இல்லாமல் இருந்து வருகிறார். எனவே நாளை இங்கிலாந்து அணிக்கு எதிரான செமி பைனலில் அவரை நீக்கி விட்டு ரிங்கு சிங்கை கொண்டு வருவதற்கான யோசனை இந்திய அணி நிர்வாகத்தில் சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

அதே சமயத்தில் அபிஷேக் ஷர்மா இங்கிலாந்து அணிக்கு எதிராக 37 பந்தில் அதிரடி சதம் ஏற்கனவே அடித்திருக்கிறார். அவருக்கு இங்கிலாந்து அணிக்கு எதிரான புள்ளி விவரங்கள் சிறப்பாக இருக்கின்ற காரணத்தினால் அவர் தொடர்ந்து விளையாட வேண்டியது அவசியம் என ஒரு தரப்பு கூறி வருகிறது.

- Advertisement -

இதுகுறித்து ரவி சாஸ்திரி பேசும்பொழுது ” முதலில் அபிஷேக் ஷர்மா பயிற்சியில் எப்படி இருக்கிறார் என்று இந்திய அணி நிர்வாகம் கவனிக்க வேண்டும். ஒருவேளை அவர் மனதளவில் நம்பிக்கையாக இல்லை என்றால் பயிற்சியில் தெரிந்து விடும். அதை இந்திய அணி நிர்வாகம் தான் உறுதிப்படுத்த வேண்டும். அவர் சரியாக பயிற்சியில் செயல்படவில்லை என்றால் நீக்கிவிட்டு ரிங்கு சிங்கை கொண்டு வரலாம்”

- Advertisement -

“நான் அந்த இடத்தில் இருந்தால் அபிஷேக் சர்மாவை நீக்க மாட்டேன். அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான அதிரடியான பெரிய சதத்தை ஏற்கனவே அடித்திருக்கிறார். எனவே அவர் மேல் நான் இன்னும் நம்பிக்கையை காட்டி தொடர்ந்து விளையாட வைப்பேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles