2026 டி20 உலகக் கோப்பை தொடரை இந்திய அணி அபாரமான முறையில் வென்று சாம்பியன் ஆனது. மேலும் செமி பைனல் மற்றும் பைனல் என இரண்டு முக்கிய போட்டிகளிலும் இந்திய அணி 250 க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. இது குறித்து பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீப் பாராட்டி இருக்கிறார்.
இந்திய அணி வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அசைக்க முடியாத ஒரு அணியாக உருவெடுத்துள்ளது. இந்த வளர்ச்சிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கடந்த 10 ஆண்டுகளாக கடுமையாக உழைத்து உள்ளதாகவும் அவர் பாராட்டி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் பேசும்போது “இந்திய அணி பைனலில் டாஸ் தோற்ற பிறகும் கூட 250 ரன்கள் எடுத்தது. அவர்களை யாராலும் தடுக்க முடியாது. அவர்கள் இந்த இடத்திற்கு வந்தது ஒரே இரவில் நடைபெறவில்லை அவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக மிக கடுமையாக உழைத்திருக்கிறார்கள். கடைசியாக நடைபெற்ற ஐசிசி தொடர்கள் மற்றும் ஆசியக் கோப்பை தொடர்கள் ஆகியவற்றை எடுத்துப் பார்த்தால் தெரியும்”
“மேலும் இந்தியா டிஎன்ஏ கோப்பைகளை வெல்வதாகவும், நம்முடைய பாகிஸ்தான் டிஎன்ஏ நாக் அவுட் சுற்றுக்கு முன்பே தோற்று வெளியேறுவதாகவும் உள்ளது. அவர்களுடைய இந்திய டிஎன்ஏ இறுதிப் போட்டியில் கோப்பைகளை வெல்வதாக அமைந்திருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

