நேற்று ஐபிஎல் தொடரில் மிக முக்கியமான போட்டியில் ஆர்சிபி அணி சிஎஸ்கே அணியை 43 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த வெற்றி பெரிய திருப்தியை கொடுப்பதாக ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் கூறியிருக்கிறார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 250 ரன்கள் குவித்து மிரட்டியது. இதைத் தொடர்ந்து விளையாடிய சிஎஸ்கே அணி 207 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
இதுகுறித்து ரஜத் படிதார் பேசும்பொழுது “இந்த வெற்றி மகிழ்ச்சியுடன் திருப்தியையும் கொடுக்கிறது. ஏனென்றால் நல்ல கிரிக்கெட் விளையாடி வெற்றி பெறுவது மிகவும் அற்புதமானது. இந்த ஆடுகளம் ஆரம்பத்தின் மெதுவாக இருந்தபோது விராட் கோலியும் பில் சால்ட்டும் சிறப்பாக ஆரம்பித்தார்கள்”
“நான் 13 வது ஓவரில் உள்ளே வரும் பொழுதே பவுலர்கள் மேல் அழுத்தத்தை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அடுத்து டேவிட் என் உடன் இருந்தது அதிர்ஷ்டம். அவர் அடித்த சிக்ஸர்களை நான் மிகவும் ரசித்தேன்” என்று கூறி இருக்கிறார்.

