நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பந்து வீசியது. முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணிக்கு விராட் கோலி 18 பந்தில் 36 ரன்கள், கேப்டன் ரஜத் பட்டிதார் 40 பந்துகளில் 63 ரன்கள், வெங்கடேஷ் ஐயர் 15 பந்தில் 29 ரன்கள் எடுத்தார்கள். அந்த அணி 20 ஓவரில் எட்டு விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்தது.
இதைத்தொடர்ந்து விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சூரியவன்சி அதிரடியில் மிரட்டி 15 பந்தில் அரை சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 26 பந்துகளில் 8 பவுண்டரிகள் 7 சிக்ஸர்கள் உடன் 78 ரன்கள் குவித்தார். பவர் பிளேவிலேயே போட்டியை தன் அணியின் பக்கம் திருப்பினார்.
இதைத் தொடர்ந்து ஜுரல் சிறப்பாக விளையாடி ஆட்டம் இழக்காமல் 43 பந்துகளில் 81 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் இலக்கை 18 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு எட்டி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

