ராஜஸ்தான் அணியுடன் மோதல்.. வெளியேறி வரும் சஞ்சு சாம்சன்.. வாங்குவதற்கு தயாராக இருக்கும் 2 அணிகள்.. யார் தெரியுமா?

ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை திடீரென டிரேட் மூலமாக மும்பை அணி வாங்கியது. இதற்காக மும்பை அணி தரப்பில் குஜராத் அணிக்கு ரூ.115 கோடி மொத்தமாக வழங்கப்பட்டது. ஐபிஎல் தொடர் வரலாற்றிலேயே இவ்வளவு பெரிய தொகை ஒரு வீரருக்காக செலவு செய்யப்பட்டது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

- Advertisement -

விலகும் சஞ்சு சாம்சன்

தற்போது மீண்டும் இப்படியொரு பலமான டிரேட் நடக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இருந்து வரும் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சனை டிரேட் செய்ய இருப்பதாக வெளி வந்திருக்கிறது. அதாவது கடந்த சீசனின் போதே சஞ்சு சாம்சன் மற்றும் ராஜஸ்தான் உரிமையாளர்கள் இடையிலான மோதல் வெளிச்சத்திற்கு வந்தது. 

- Advertisement -

இதனால் சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு வரப்போவதாக தகவல் வெளியாகியது. தற்போது ராஜஸ்தான் அணி நிர்வாகத்துடனான மோதலால் சஞ்சு சாம்சன் வெளியேற முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் ராஜஸ்தான் அணிக்காக சஞ்சு சாம்சன் விளையாட அவரது குடும்பத்தினரும் விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது. 

- Advertisement -

2 அணிகள் தயார்

இதனால் சஞ்சு சாம்சன் டிரேட் மூலம் வெளியேறவோ அல்லது மினி ஏலத்தில் விடுவிக்கவோ கோரிக்கை விடுத்திருக்கிறார். இதனால் ராஜஸ்தான் அணி நிர்வாகம் சஞ்சு சாம்சனை பிரியவும் தயாராகிவிட்டது. அதற்கு முன்பாக டிரேட் மூலம் எந்த அணி நிர்வாகம் கோரிக்கை விடுக்கிறது என்பதை பார்க்க காத்திருக்கிறது. சஞ்சு சாம்சனை வாங்க 2 அணிகள் தயாராக இருக்கின்றனர். 

அதில் தோனியின் இடத்தை நிரப்ப சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணி வாங்க முயற்சித்து வருகிறது. அதேபோல் கேப்டன் இல்லாமல் தடுமாறி வரும் கேகேஆர் அணி சஞ்சு சாம்சனை வாங்க வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது. அந்த அணியின் வெங்கடேஷ் ஐயரை மினி ஏலத்தில் விட்டுவிட்டு, சஞ்சு சாம்சனை வாங்க கேகேஆர் அணி ஆர்வம் காட்டும் என்று சொல்லப்படுகிறது. இதனால் சஞ்சு சாம்சனுக்கு ஜாக்பாட் உறுதியாகி உள்ளது.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles