நடந்து முடிந்த டி20 உலக கோப்பை தொடரை இந்திய அணி வென்றது. நேற்று நடைபெற்ற கிரிக்கெட் விருது வழங்கும் நிகழ்வில் ராகுல் டிராவிட் இந்திய அணியை பாராட்டி பேசி இருக்கிறார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரை ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் இந்திய அணி கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து இந்திய அணி கம்பீர் பயிற்சியின் கீழ் மீண்டும் டி20 உலக கோப்பை தொடரை கைப்பற்றி இருக்கிறது.
இதுகுறித்து ராகுல் டிராவிட் பேசும் பொழுது “சஞ்சு சாம்சன் இந்திய அணிக்கு மிக முக்கியமான மூன்று போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வெற்றி பெற வைத்ததை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. அவரைப் போன்ற கடினமாக உழைக்கும் ஒரு வீரர் சிறப்பாக வந்தது மிகவும் நல்ல விஷயம்”
“முன் எப்போதையும் விட இந்திய அணியின் திறமை களத்தில் மிக சிறப்பாக வெளிப்படுகிறது. முன்பும் இந்திய கிரிக்கெட்டுக்கு தேவையான திறமைகள் களத்திற்கு வெளியில் இருந்தது. ஆனால் இப்பொழுதுதான் களத்தில் எல்லா விஷயங்களும் மிக சரியாக வெளிப்படுகின்றன” என்று கூறி இருக்கிறார்.

