இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட், கடந்த 2004 ஆம் ஆண்டு இந்திய அணி t20 உலக கோப்பை வெற்றி பெற்றதோடு பயிற்சியாளர் பதவியை விட்டு விலகுவதாக அறிவித்தார். எனவே இந்த முறை இந்திய அணி கௌதம் கம்பீர் தலைமையில் இந்த t20 உலக கோப்பை தொடரை எதிர்கொள்ள உள்ளது.
இந்திய அணி t20 கிரிக்கெட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மிகப்பெரிய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. உள்நாடு வெளிநாடு என எந்த நாடாக இருப்பினும் தனது அதிரடியான ஆட்டத்தால் எதிரணிகளை துவம்சம் செய்து வருகிறது. இந்த சூழ்நிலையில் இந்திய அணி மீண்டும் இந்த முறை டி20 உலக கோப்பையை கைப்பற்றும் என்று பெரிய நம்பிக்கையோடு இருக்கும் நிலையில், ராகுல் டிராவிட் எந்த சூழ்நிலையிலும் கவனச் சிதறலோடு செயல்படக் கூடாது என்று தனது அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் போது “இந்திய அணி எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் ஒரு மோசமான நாள் அமைந்தால் அது மொத்தத்தையும் சிதைத்து விடும். இந்திய அணி t20 உலக கோப்பையில் ஃபேவரிட் ஆக தொடங்குகிறார்கள். இந்திய அணி எனக்குத் தெரிந்து நிச்சயம் செமி பைனலுக்கு வந்துவிடும். எனக்கு அந்த அனுபவம் இருப்பதால் அன்றைய நாளில் சிறப்பாக விளையாடுவது மிகவும் முக்கியம் என்று கூறுவேன். இல்லையென்றால் யாராவது ஒருவர் நல்ல இன்னிங்ஸ் விளையாடி கூட உங்களை காயமடைய வைக்க முடியும்” என்று பேசி இருக்கிறார்.

