18 வது ஓவர் வரைக்கும் நாங்கதான்.. ஆனா இந்த பையன் நடுவுல வந்து புடுங்கிட்டு போயிட்டான் – ரகானே கருத்து

நேற்று ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக முகுல் சவுத்ரி ஆடிய பேட்டிங் இந்தியா முழுமையும் பரவலாக பேசுபொருளாக மாறியுள்ளது.

- Advertisement -

இந்த போட்டியில் கொல்கத்தா நிர்ணயித்த 182 ரன் இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ 16 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த நிலையில் கடைசி 4 ஓவர்களுக்கு வெற்றிக்கு 54 ரன்கள் தேவைப்பட்டது.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய உள்நாட்டு இளம் வீரர் முகுல் சவுத்ரி ஆட்டம் இழக்காமல் 27 பந்தில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் ஏழு சிக்ஸர்களுடன் 54 ரன்கள் எடுத்து தனியாக நின்று போட்டியை கொல்கத்தா கையில் இருந்து பறித்து லக்னோவுக்கு கொடுத்தார்.

- Advertisement -

இது குறித்து ரகானே பேசும்போது “இந்த போட்டியில் 18வது ஓவர் வரையில் நாங்கள் தான் வெற்றி பெறக்கூடிய இடத்தில் இருந்தோம். ஆடுகளத்தில் மெதுவான பந்துகள் அருமையாக வேலை செய்தது. ஆனால் அப்படியான பந்துகளை மிகவும் பலமாக அடித்து முகில் சவுத்ரி வெற்றியை எங்கள் கைகளில் இருந்து பறித்து விட்டார். அவர் ஆடிய விதம் மற்றும் அவருடைய தைரியத்திற்கு நிச்சயம் பாராட்ட வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles