உண்மைய ஒத்துக்கிறேன்.. இந்த 2 இந்திய வீரர்கள் தான் பிரச்சனை.. எங்கள ஜெயிக்க விடமாடாங்க – ரச்சின் ரவீந்திரா வெளிப்படை பேச்சு

வங்கதேச அணிக்கு எதிரான அபார சீரிஸ் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது இந்தியா. பெங்களூருவில் நாளை முதல் டெஸ்ட் துவங்குகிறது.

- Advertisement -

தொடருக்கு முன் இரண்டு அணித் தரப்பு வீரர்கள் & பயிற்சியாளர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்து அவர்கது கேள்விகளுக்கு பதில் அளித்தனர். அதில் இளம் நட்சத்திர வீரர் ரச்சின் ரவீந்திரா, இந்தத் டெஸ்ட் தொடரில் மிகவும் சவாலாக இருக்கும் 2 முக்கிய இந்திய வீரர்கள் பற்றி பேசியுள்ளார்.

- Advertisement -

இந்திய மைதானங்களில் இந்திய அணியை வீழ்த்துவது என்பது சாதாரண எளிய விஷயம் அல்ல. சொந்த ஊரில் ஆதிக்கம் செலுத்தும் நாடுகளில் இந்திய அணியே மிகவும் வலுவானதாக தென்படுகிறது. இந்திய பந்துவீச்சாளர்களை தாண்டி அவர்களது கோட்டையில் வெல்வது எவ்வளவு சவலானா ஒன்று என்பதைப் பற்றி பல்வேறு சிறந்த வெளிநாட்டு வீரர்கள் கூறியுள்ளார்கள். அதுவும் குறிப்பாக ஸ்பின்னர்கள் தான் இந்தியாவுக்கு பலம்.

- Advertisement -

நாளை துவங்கவுக்க டெஸ்ட் தொடர் குறித்து நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா கூறியதாவது, ” இந்திய அணியின் பேட்டிங், பவுலிங் பலம் பற்றி அவைவருக்கும் தெரியும். இந்திய அணி தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வருகிறது. மேலும் அவர்கக்து சொந்த மைதானங்களில் அவர்கள் எவ்வளவு சிறப்பாக செயல்படுவார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். . “

” நீண்ட நேரம் நிலைத்து நின்று பந்துவீசக் கூடிய பவுலர்கள் இந்திய அணியில் உள்ளார்கள். அவர்களுக்கு இது பழக்கப்பட்ட ஒன்று. குறிப்பாக அஷ்வின் மற்றும் ஜடேஜா. அவர்கள் இருவரும் பேட்டிங்கிலும் அணிக்கு அதிகம் பணிகளிக்கின்றனர். அதனால் இவர்களைத் தாண்டி இந்தத் தொடரை வெல்வது என்பது கடினம் தான். ” எனக் கூறியுள்ளார் ரச்சின் ரவீந்திரா.

- Advertisement -

அஷ்வின் மற்றும் ஜடேஜா நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக நல்ல ரெக்கார்ட் வைத்துள்ளனர். அஷ்வின் 9 போட்டிகளில் 66 விக்கெட்டுகள் மற்றும் ஜடேஜா 8 போட்டிகளில் 25 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்கள். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குள் நுழைய இந்திய அணிக்கு இன்னும் 8 போட்டிகளில் 3 வெற்றி கிடைத்தாலே போதும். டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு முன்பு சொந்த ஊரில் நியூசிலாந்து அணியை வென்றே அதை உறுதி செய்யும் நோக்கில் இந்தியா உள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles