36 வருடமா கட்டிகாத்த பெருமை.. காற்றில் பறக்கவிட்ட கம்பீர்& ரோஹித்.. நியூசிலாந்திடம் இந்திய அணி படுதோல்வி

இந்தியா – நியூசிலாந்து இடையேயான டெஸ்ட் தொடரில் முதல் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் துவங்கியது. 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தி வரலாற்றுச் சாதனைப் படைத்துள்ளது.

- Advertisement -

முதல் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டதை அடுத்து இரண்டாம் நாள் டாஸ் வென்ற இந்திய அணிக் கேப்டன் ரோஹித் ஷர்மா முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தார். நாள் இறுதியில் அந்த முடிவு மிகப் பெரிய தவறாக இந்திய அணிக்கு அமைந்ததற்கு அவர் வருந்தி ஒப்புக் கொண்டார்.

- Advertisement -

மேகமூட்ட வானிலை மற்றும் பிட்ச் கொடுத்த சுவிங்வை பயன்படுத்தி நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் முதல் இன்னிங்சில் இந்திய அணியைப் பெட்டிப் பாம்பாக அடக்கினர். வெறும் 46 ரன்களுக்கு இந்திய அணி சுருண்டதன் மூலம் சொந்த மண்ணில் குறைந்த ஸ்கோராக இது பதிவாகியுள்ளது.

- Advertisement -

தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி வலுவான நிலைக்குச் சென்றது. டெவான் கான்வே 91 ரன்களுடன் அற்புதமான துவக்கத்தைக் கொடுக்க மிச்சத்தை ரச்சின் ரவீந்திரா பார்த்துக் கொண்டார். அவருடன் இடையில் தரமான பார்ட்னர்ஷிப் அமைத்து சவுதி தன் பங்குக்கு அதிரடி காட்டி 65 ரன்கள் சேர்த்தார். கடைசி வரை நின்று ஆடிய ரச்சின் 134 ரன்களில் பெவிலியன் திரும்ப 356 ரன்கள் எனும் பெரிய முன்னிலைப் பெற்றது.

ஆனால் இந்திய அணி இதைப் பின்னடைவாகப் பார்க்காமல் இரண்டாவது இன்னிக்சில் நம்பிக்கையாக விளையாடினர். ஜெய்ஸ்வால் 35, ரோஹித் 52, கோலி 70 ஆகியோர் நல்ல அடித்தளம் அமைக்க இதனை சர்பராஸ் கான் மற்றும் பண்ட் தொடர்ந்தனர். இருவரும் அதிரடியைக் கையில் எடுத்து நியூசிலாந்து வீரர்களை நாலாப் பக்கமும் ஓட விட்டனர்.

- Advertisement -

துரதிஷ்டவசமாக பண்ட் 99 ரன்களில் க்ளீன் போல்டாக, சதம் அடிக்கும் பொன்னான வாய்ப்பு பறிபோனது. மறுபக்கம் இந்திய அணியில் தன் பெரியாரை முழுமையாகப் பாதிக்கும் அளவுக்கு சர்பராஸ் கான் அபார சதம் விளாசி 150 ரன்கள் சேர்த்தார். 408/3 என இந்தியா ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் வேளையில் சர்பராஸ் கான் ஆட்டமிழந்து வெளியேற இந்திய அணி மீண்டும் சரிவில் சிக்கியது.

அடுத்த 54 ரன்‍களில் 7 விக்கெட்டுகளை தாரை வார்த்து 462 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வெறும் 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிமையாக வென்றது. வில் டேங்க் 48* மற்றும் ரச்சின் ரவீந்திரா 39* களத்தில் இருந்து வெற்றியை உறுதிச் செய்தனர். முதல் இன்னிங்சில் 134, இரண்டாவது இன்னிங்சில் 39* என சிறப்பாக விளையாடிய ரச்சின் ரவீந்திரா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இதன் மூலம் இந்திய மண்ணில் 37 டெஸ்ட்டில் தன் மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது நியூசிலாந்து. 36 வருடங்களாக சொந்த மண்ணில் நியூசிலாந்து அணியுடன் தோல்வியே காணாமல் காத்து வந்த இந்தியா, இன்று அதனை இழந்துள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles