ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறன்.. எங்கள் தரத்திற்கு ஏற்ப நாங்கள் விளையாடவில்லை.. தோல்விக்கு பின்னர் பேசிய பஞ்சாப் கேப்டன் ஷாம் கரண்

பஞ்சாப் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்த்து விளையாடிய 58 வது ஐபிஎல் லீக் போட்டியில் 60 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணியிடம் மோசமான தோல்வியை தழுவியது.

- Advertisement -

இதன் மூலம் பஞ்சாப் அணி பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறி இருக்கிறது. இந்த தோல்விக்கு பின்னர் பஞ்சாப் அணியின் கேப்டன் ஷாம் கரண் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார். இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பெங்களூரை பேட்டிங் செய்ய அழைத்தது.

- Advertisement -

இதன்படி 20 ஓவர்களில் பெங்களூர் அணி 7 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் என்ற மெகா இலக்கை நிர்ணயித்தது. இதில் அதிகபட்சமாக விராட் கோலி 47 பந்துகளில் ஏழு பவுண்டர்கள் மற்றும் ஆறு சிக்சர்கள் என 92 ரன்கள் விளாசினார். பஞ்சாப் அணிதரப்பில் சிறப்பாக பந்து வீசிய கவேரப்பா 4 ஓவர்களில் 36 ரன்கள் விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளும் ஹர்சல் பட்டேல் மூன்று விக்கட்டுகளும் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

இதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணிக்கு தொடக்கத்தில் ஒரு விக்கெட்டை விரைவிலேயே இழந்தாலும் அதற்கு பின்னர் ஜோடி சேர்ந்த பேர்ஸ்டோ மற்றும் ரூசோ ஜோடி 31 பந்துகளுக்கு 65 ரன்கள் குவித்தது. இந்த ஜோடி களத்தில் இருக்கும் வரை வெற்றி வாய்ப்பு பஞ்சாப் அணிக்கு என்று தோன்றியது ஆனால் இவர்கள் ஆட்டம் இழந்த பின்னர், சீரான வரிசையில் விக்கெட்டுகளை இழக்க பஞ்சாப் அணி 181 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

பெங்களூர் அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய சிராஜ் 4 ஓவர்களில் 43 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து முக்கியமான மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த தோல்விக்கு பின்னர் பேசிய பஞ்சாப் அணியின் கேப்டன் ஷாம் கரன் கூறும் பொழுது
“இந்த சீசன் முழுவதுமே எங்களிடம் நேர்மையான அணுகுமுறையை வெளிப்பட்டது. ஆனால் அவை யாவும் வெற்றிகள் பெற போதுமானதாக இல்லை. இனிவரும் எஞ்சிய போட்டிகளுக்கும் சிறந்த அணியை கொண்டுள்ளோம் என்பதை நாங்கள் அறிவோம்.

- Advertisement -

இப்போதும் நாங்கள் தைரியமாக உணர்கிறோம். விளையாட்டில் எப்போதுமே கற்றுக் கொள்ளும் உணர்வு மிகவும் அவசியம். வெற்றி, தோல்வி என்பதை தாண்டி நாம் அணுகுமுறையை நேர்மையாக வைத்திருக்க வேண்டும். ஒரு பெரிய அணியை வழி நடத்தியதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நாங்கள் இன்னும் சில வெற்றிகளை பெற்றிருக்க வேண்டும். நாங்கள் இந்த தொடரில் சில ரன் சேஸ்கள் மூலம் சாதனைகளையும் நிகழ்த்தி இருக்கிறோம்.

இதையும் படிங்க:நாங்கள் சிறந்த அணி என்பதை நிரூபிக்காமல் விடமாட்டோம்.. எங்கே தவறு செய்தோம் என்பதில் கவனம் செலுத்தினோம்.. வெற்றிக்குப் பின்னர் டூ பிளஸ்சிஸ் பேட்டி

ஆனால் எங்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நாங்கள் விளையாடாதது ஏமாற்றம் அளிக்கிறது. இதற்காக ரசிகர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஆனால் நாங்கள் விடாமல் தொடர்ந்து போராடுவோம். ஏற்றத்தாழ்வுகள் இருக்குமானால் நீங்கள் கற்றுக் கொண்டு கடினமாக தொடர்ந்து முன்னேற வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles