நேற்று ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேசியிருக்கிறார்.
இந்த போட்டியில் ஒரு கட்டத்தில் 230 முதல் 240 ரன்கள் எடுக்கும் வாய்ப்பில் மும்பை இந்தியன்ஸ் இருந்தது. ஆனால் ஹர்திக் பாண்டியா அடித்த பந்தை ஸ்ரேயாஸ் ஐயர் அற்புதமாக பிடிக்க அங்கிருந்து போட்டி பஞ்சாப் கிங்ஸ் கண்ட்ரோலுக்கு வந்தது.
இதுகுறித்து ஸ்ரேயாஸ் ஐயர் பேசும்போது ” நான் எடுத்த கேட்ச் மும்பை அணியின் ரன் வேகத்தை கட்டுப்படுத்தியது. ஆனால் உண்மையில் எங்களுடைய ஒட்டுமொத்த அணியும் பவுண்டரிகளை குறைத்து எதிரணியை கட்டுப்படுத்துவதில் பெரிய ஆர்வம் காட்டி வருகிறார்கள் “
“கடந்த ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியிலும் கூட இறுதியில் அவர்களுடைய ரன் வேகத்தை எப்படி கட்டுப்படுத்துவது என்று கலந்து ஆலோசித்து பவுண்டரிகள் கொடுப்பதை குறைத்தார்கள். நாங்கள் இந்த விஷயத்தில் மிகவும் முன்னேறி வருகிறோம்” என்று கூறி இருக்கிறார்.

