இனி மும்பை அணிக்காக விளையாட விரும்பவில்லை.. லெட்டர் எழுதிய பிரித்வி ஷா.. வாழ்க்கையை மாற்றப்போகும் முடிவு.. வந்துட்டான்டா குட்டி சச்சின்

இந்திய கிரிக்கெட்டின் அடுத்த சச்சின் டெண்டுல்கராக வருவார் என்று பார்க்கப்பட்டவர் பிரித்வி ஷா. இந்திய யு19 கிரிக்கெட் கேப்டனாக இருந்து கோப்பையை வென்ற அவர், விரைவாக இந்திய அணிக்காக அறிமுகம் செய்யப்பட்டார். தொடக்க டெஸ்ட் தொடரிலேயே சதம் விளாசி அனைவரையும் வியக்க வைத்த அவர், அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக சரிவை சந்திக்க தொடங்கினார்.

- Advertisement -

பிரித்வி ஷா முடிவு

ஊக்க மருந்து சர்ச்சை, ஃபிட்னஸ், ஒழுக்கமின்மை, பயிற்சிக்கு வராதது, பேட்டிங் ஃபார்ம் என்று ஏராளமான பிரச்சனைகளில் பிரித்வி ஷா சிக்கினார். ரிக்கி பாண்டிங் போன்ற ஒரு பயிற்சியாளரால் கூட பிரித்வி ஷாவை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் ஐபிஎல் தொடரில் ரூ.75 லட்சம் மட்டுமே அடிப்படை தொகையாக நிர்ணயித்தும் யாரும் வாங்க முன்வரவில்லை.

- Advertisement -

கடைசியாக சையத் முஷ்டாக் அலி டிராபியில் மும்பை அணிக்காக இறுதிப் போட்டியில் விளையாடி இருந்தார் பிரித்வி ஷா. அப்போதும் ஸ்ரேயாஸ் ஐயர், பிரித்வி ஷாவுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது நன்றாக தெரியும். நாம் யாரையும் கட்டுப்படுத்த முடியாது என்று அட்வைஸ் கொடுத்திருந்தார். அதற்கு முன்பாக மும்பை அணியில் இருந்து நீக்கப்படும், மீண்டும் சேர்க்கப்பட்டும் வந்தார்.

- Advertisement -

மும்பை கிரிக்கெட் உடனான உறவு

இந்த நிலையில் மும்பை கிரிக்கெட் சங்கத்துடனான உறவை முறித்து கொள்ள பிரித்வி ஷா முடிவு எடுத்துள்ளார். உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேறு மாநில கிரிக்கெட் சங்கம் சார்பாக விளையாட விரும்புவதாக கூறியுள்ள பிரித்வி ஷா, மும்பை அணி இத்தனை ஆண்டுகளாக அளித்த வாய்ப்புகளுக்கும், ஆதரவுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

கடந்த 7 மாதங்களாக பிரித்வி ஷா எந்த கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடவில்லை. இதனால் பிரித்வி ஷா மும்பை அணியில் இருந்து வெளியேறி வேறு அணிக்காக விளையாடுவது அவருக்கும் நன்பை பயக்கும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அங்கும் ஒழுக்கமின்மை, பயிற்சிக்கு வராமல் டிமுக்கி கொடுப்பது என்று சுற்றினால், பிரித்வி ஷாவின் கிரிக்கெட் வாழ்க்கையே முடிவுக்கு வரும் என்று விமர்சிக்கப்படுகிறது.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles