இன்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக சேப்பாக்கத்தில் விளையாடும் சிஎஸ்கே அணி முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கடந்த போட்டியில் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட உள்நாட்டு வீரர் பிரசாந்த் வீர் விளையாடுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இது பெரிய விமர்சனத்தை உண்டாக்கி இருந்தது.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ஷார்ட்டை நீக்கி விட்டு அவருடைய இடத்திற்கு பிரசாந்த் வீர் கொண்டுவரப்பட்டிருக்கிறார்.
இது குறித்து ருதுராஜ் பேசும்பொழுது “இந்த விக்கெட் மிகவும் ட்ரையாகத் தெரிகிறது. பெரும்பாலும் இரண்டாவது விளையாடும் பொழுதும் இது மாறாது. ஏப்ரல் மாதம் என்பதால் பனிப்பொழிவு பிரச்சனையில் இருக்காது. நாங்கள் நல்ல ஸ்கோர் குவிக்க வேண்டியது மட்டுமே முக்கியம். மேலும் இந்த போட்டியில் பிரசாந்த் வீர் அறிமுகம் ஆகிறார்” என்று கூறியிருக்கிறார்.

