சொன்னா புரிஞ்சுக்கோங்க.. பாகிஸ்தான் நல்ல டீம் இல்ல.! நாம நம்பர் 1 ஆனதே இப்படித்தான்.! சொந்த அணியை விமர்சித்த மிஸ்பா உல் ஹக்.!

உலகக் கோப்பை போட்டிகள் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. ஆண்களின் போட்டிகள் முடிவடைந்த நிலையில் நியூசிலாந்து,பாகிஸ்தான் பங்களாதேஷ் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் முதல் வெற்றியை பதிவு செய்திருக்கின்றன. இன்று நடைபெற இருக்கும் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன.

- Advertisement -

முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டிகளின் போது பாகிஸ்தான் அணி உலக ஒருநாள் போட்டிகளின் தரவரிசையில் முதல் இடத்தை பெற்று இருந்தது அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் ஒருநாள் போட்டிகளில் சிறந்த பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையிலும் நம்பர் ஒன் இடத்தை பெற்றிருந்தார். ஆனால் ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணி மோசமாக விளையாடி தோற்றத்தோடு இறுதிப் போட்டிக்கு தகுதி பொறாமல் சூப்பர் சிக்ஸ் சுற்றோடு வெளியேறியது .

- Advertisement -

இதனால் அந்த அணியின் மீது பலத்த விமர்சனங்களும் எழுந்தன. உலக கோப்பையை கைப்பற்றுவதில் முன்னணி அணியாக கருதப்பட்ட பாகிஸ்தான் அணிக்கே இது பெரும் பின்னடைவாக அமைந்தது. மேலும் உலகக் கோப்பையின் பயிற்சி போட்டியில் இப்போது ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளிடம் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியது. சிறந்த பந்துவீச்சு வரிசையை கொண்ட பாகிஸ்தான் அணி உலகக்கோப்பை பயிற்சி ஆட்டங்களில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக 350 ரன்கள் கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும் முன்னாள் தேர்வு குழு தலைவருமான மிஸ்பா உல் ஹக் பாகிஸ்தான் அணி எவ்வாறு ஒரு நாள் போட்டிகளின் தரவரிசையில் முதலிடத்தை பெற்றது என்றும் அவர்கள் உலக கோப்பையில் எவ்வாறு செயல்பட வேண்டும் எனவும் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது தெரிவித்திருக்கிறார் . அவர் தனது சொந்த அணிக்கு எதிராகவே கடுமையான விமர்சனங்களை இந்த நிகழ்ச்சியில் முன் வைத்திருப்பது பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இது தொடர்பாக பேசியிருக்கும் மிஸ்பா ” நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பாகிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் செய்தன. அந்த இரண்டு அணிகளுமே உலக கிரிக்கெட்டில் தரம்வாய்ந்த அணிகள் தான் ஆனால் அந்த அணிகளின் சி மற்றும் டி பிரிவு வீரர்களே பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் பங்கேற்று விளையாடினர் . அவர்களை வெற்றி பெற்று நாம் ஐசிசி தரவரிசையில் முதலிடத்திற்கு வந்தோம். மேலும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் சில அணிகளையும் வெற்றி பெற்றோம்” என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய மிஸ்பா ” ஆஸ்திரேலியாவின் சி அணி பாகிஸ்தானிற்கு வந்தது. அந்த அணி கூட நமக்கு எதிராக ஒரு போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறது. நியூசிலாந்தின் முக்கிய வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய நேரத்தில் அவர்களின் டி பிரிவு அணியை நமது நாட்டிற்கு வந்து விளையாடியது. ஆனால் அவர்களும் நமக்கு கடும் நெருக்கடியான போட்டியை தந்தார்கள். இவற்றில் இருந்து நமது அணியின் தரம் எவ்வாறு இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ரேங்கிங் என்பது ஒரு பொருட்டே அல்ல” என தெரிவித்திருக்கிறார்.

மேலும் பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான வாசிம் அக்ரமும் முதல் ரேங்க் பெறுவது முக்கியம்தான் ஆனால் அதனைத் தக்க வைத்துக் கொள்வது அதைவிட முக்கியமானது என தெரிவித்திருந்தார். 13 வது உலகக்கோப்பை தொடரில் தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி நெதர்லாந்தை 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனைத் தொடர்ந்து வருகின்ற பத்தாம் தேதி நடைபெற இருக்கும் போட்டியில் இலங்கை அணியை எதிர்த்து ஹைதராபாத்தில் விளையாட உள்ளது. இலங்கை அணி தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தனது முதல் போட்டியில் தோல்வி அடைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles