சும்மா சும்மா கைத் தூக்கினா இதான் நடக்கும்.. தவறான வீரரை வாங்கிய பின் எங்களுக்கு வேண்டாம் என சண்டை போட்ட பஞ்சாப் அணி

2024ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் ஏலம் நேற்று துபாயில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. அனைத்து அணிகளும் பயங்கரமாக மோதிக் கொண்டு தங்களுக்கான வீரர்களை எடுத்தனர். அதில் எந்த வருடமும் இல்லாமல் முதல் முறையாக ஒரு அணி தவறான வீரரை ஏலம் கேட்டு ஏமாந்துள்ளது.

- Advertisement -

பிரீத்தி சிந்தாவின் பஞ்சாப் கிங்ஸ் அணி எப்போதும் ஏலம் என்றால் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுவர். எந்த வீரர் வந்தாலும் கையைத் தூக்கிக் கொண்டே இருக்கிறார்கள் என சமூக வலைத்தளத்தில் மக்கள் இவர்களை பயங்கரமாக கலாய்ப்பது வழக்கம். அதன் விளைவாக வந்தது தான் இந்த தவறான வீரர் தேர்வு.

- Advertisement -

முதலில் பெரிய வீரர்கள் ஏலம் கேட்கப்படுவதில் விலை போகாதவர்கள் பிறகு இறுதியில் சில அணிகளில் இன்னும் இடம் இருந்தால் மீண்டும் எடுக்கப்பட வாய்ப்புண்டு. அந்த முறையில் தென்னாபிரிக்கா வீரர் ரைலி ரூசவ்வை 8 கோடிக்கு வாங்கியது பஞ்சாப். அதே போல தான் சில உள்நாட்டு வீர்களுக்கும் பொருந்தும்.

- Advertisement -

இந்த முறை தான் பஞ்சாப் தேவையான வீராகளை மட்டும் குறிவைத்து எடுத்தது. அதில் சற்று சிறிய சிக்கல் ஏற்பட்டு தேவையில்லாத வீரர் ஒருவரை அடிப்படை விலையில் எடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறது. விதிகளின் படி விற்ற வீரரை தேவையில்லை என மாற்ற இயலாது.

32 வயதான ஷசாங்க் சிங் எனும் வீரரை 20 லட்சம் அடிப்படை விலையில் சுலபமாக வாங்கியது பஞ்சாப். அடுத்த வீரருக்கு செல்லும் முன்பு திடீரென குறுக்கிட்டு அங்கேயே இந்த வீட்டை வேண்டாம் எனச் சொல்லி திருப்பி எடுத்துக் கொள்ளும் கேட்டது பஞ்சாப் நிர்வாகம். இதற்கு மல்லிகா சாகர், “ என்பது தவறான வீரரா ? உங்களுக்கு வேண்டாமா ? ” எனக் கேட்க பஞ்சாப் அணி குழப்பத்தில் மாற்றி கை தூக்கி விட்டதாக பதிலளித்தனர்.

- Advertisement -

“ ஆனால் நான் சுத்தியலை அடித்து அறிவித்துவிட்டேன். வீரர் எண் 237 ஷசாங்க் சிங் உங்களுக்குத் தான். ” என கட்டாயமாக ஏலம் கொடுக்கும் மல்லிகா சாகர் சொல்லிவிட்டார். தற்போது வேறு வழியின்றி பஞ்சாப் அவரை அணியில் சேர்த்ததாக வேண்டும். வெறும் 20 லட்சம் என்பதால் பெரிய சிக்கலாக அவர்களுக்கு இது தென்படாது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles