தப்பு தான் ஆன என்ன பண்றது.. 150 அடிச்சும் சர்பராஸ் கான் அடுத்தப் போட்டியில் வேண்டாம்.. கே.எல்.ராகுல் தொடரட்டும் – பார்த்தீவ் பட்டேல் விளக்கம் !

36 வருடங்களாக காத்து வந்த பெருமையை நொறுக்கி முதல் டெஸ்ட்டில் இந்தியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வென்றது. புனேவில் நடக்கும் அடுத்த டெஸ்ட்டில் நிச்சயம் வெற்றிக்காக வரிந்துக் கட்டும் இந்தியா எவ்வித மாற்றங்களைச் செய்து வரும் என்பது பற்றி முன்னாள் வீரர் பார்தீவ் பட்டேல் பேசியுள்ளார்.

- Advertisement -

முதல் டெஸ்ட்டில் இந்தியா 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து 356 ரன்கள் முன்னிலைப் பெற்றது. பெரிய பின்னடைவாக இருந்தாலும் இந்திய வீரர்கள் எப்படியாவது வெற்றியைப் பெற வேண்டுமென நம்பிக்கையாக ஆடினர். இந்திய அணியின் டாப் ஆர்டர் இரண்டாவது இன்னிங்ஸில் அமர்களப்படுத்தியது.

- Advertisement -

இதில் குறிப்பாக சர்பராஸ் கான் டெஸ்ட் கிரிக்கெட்டில் தன் முதல் சதத்தைப் பதிவுச் செய்தார். சிறப்பான கிரிக்கெட்டை விளையாடிய அவர் 150 ரன்கள் எடுத்து இந்திய அணியை வலுவான நிலையில் விட்டுச் சென்றார். ஆனால் பின்னர் வந்த எந்த வீரர்களும் சோபிக்கததால் இந்தியா 106 ரன்கள் முன்னிலையில் ஆல் அவுட் ஆக, நியூசிலாந்து அதனைச் சுலபமாக துரத்தி வென்றது.

- Advertisement -

இந்தப் போட்டியில் அதுவம் சொந்த மைதானத்தில் இரண்டு இன்னிங்சிலும் வெறும் 0, 12 என கே.எல்.ராகுல் பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்துவிட்டார். இதற்கு முன் நடந்த வங்கதேச டெஸ்ட் தொடரிலும் ஒரு இன்னிங்சில் மட்டும் அறை சதம் விளாசிய அவர் மிச்சம் அனைத்திலும் சுதப்பிவிட்டார். இப்படி இருக்கும் பட்சத்தில் அவர் ஏன் இன்னுமும் அணியின் தொடர்கிறார் என சமூக வலைதளத்தில் இந்திய ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி அதிருப்த்தி தெரிவித்துள்ளார்கள்.

ஆனாலும் கே.எல்.ராகுல் அடுத்தப் போட்டியில் தொடர்வார் என முன்னாள் வீரர் பார்தீவ் பட்டேல் நம்பிக்கையாக உள்ளார். அவர் பேசியதாவது, ” கடைசி நிமிடத்தில் கில்லுக்கு பதிலாக உள்ளே வந்த சர்பராஸ் கான் மிகச் சிறப்பாக விளையாடி 150 ரன்கள் அடித்துள்ளார். அதற்கு பாராட்டுகள். இருப்பினும் இப்போது கேள்வி என்னவென்றால் அடுத்தப் போட்டியில் சர்பராஸ் கான் விளையாட வாய்ப்பு உள்ளதா அல்லது கே.எல்.ராகுல் தொடர்வாரா ?‌ “

- Advertisement -

” என்னைக் கேட்டால் நான் ராகுலுடன் தான் தொடர்வேன். காரணம், அண்மையில் கே.எல்.ராகுல் நம்பர் 6ல் தொடர்ந்து விளையாட நேரம் கொடுக்கப்படும் என கேப்டன் ரோஹித் ஷர்மாவே கூறியுள்ளார். அதனால் தான் கில் இல்லாத போதும் கூட ராகுல் அவரின் ஆறாம் இடத்தில் தொடர்ந்து விளையாடினார். சிராஜ் அல்லது ஆகாஷ் தீப் விஷயத்தில் எவ்வாறு சிராஜ்க்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறதோ அதே போல தான் சர்பராஸ் கான் – கே.எல்.ராகுலுக்கும் நடக்கும் என எனக்குத் தோன்றுகிறது. ” எனக் கூறியுள்ளார் பார்தீவ் பட்டேல்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles