வெறியுடன் ஆடிய பாகிஸ்தான்.. ஒரு பேட்ஸ்மேனும் உருப்படியா ஆடலை.. ஆசியக் கோப்பையில் மீண்டும் அதிர்ச்சி.. இறுதிச் சுற்றில் பாகிஸ்தான்!

ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் – வங்கதேசம் இடையிலான ஆட்டம் துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதல் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 49 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பின் முகமது ஹாரிஸ் மற்றும் முகமது நவாஸ் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 135 ரன்களை மட்டுமே சேர்த்தது.

- Advertisement -

ஷாகீன் அப்ரிடி அசத்தல்

இதனால் வங்கதேச அணிக்கு 136 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்க முடிந்தது. வங்கதேச அணியின் வெற்றி உறுதி என்று ரசிகர்கள் கற்பனை செய்ய தொடங்கினர். ஆனால் ஷாகின் அப்ரிடி வீசிய முதல் ஓவரிலேயே வங்கதேச அணி முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. பின் வந்த ஹிர்தாய் 5 ரன்களில் வெளியேற, நம்பிக்கை நட்சத்திரமான தொடக்க வீரர் சையிப் ஹாசனும் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். 

- Advertisement -

இதனால் வங்கதேச அணி 29 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. பின்னர் வந்த மெஹதி ஹாசன் 11 ரன்களிலும், நூருல் ஹாசன் 16 ரன்களிலும், கேப்டன் அலி 5 ரன்களிலும் வெளியேறினர். இதனால் 73 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது. ஆனால் ஷமீம் ஹொசன் அதிரடியாக ரன்களை குவித்து வந்தார். பின் அவரும் ஆர்வக் கோளாறில் ஷாகின் அப்ரிடி பந்தில் ஆட்டமிழந்தார். 

- Advertisement -

பாகிஸ்தான் வெற்றி

இதன்பின் பாகிஸ்தான் அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியானதாக பார்க்கப்பட்டது. ஏனென்றால் வங்கதேச அணியின் வெற்றிக்கு 18 பந்துகளில் 39 ரன்கள் தேவையாகியது. இதன்பின் வந்த வீரர்களில் யாரும் பெரிதாக சோபிக்காத சூழலில், கடைசி ஓவரில் ரிஷாத் ஹொசைன் மட்டும் அதிரடியாக ஆடினார். ஆனாலும் வங்கதேச அணியின் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. 

இறுதியாக வங்கதேச அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் பாகிஸ்தான் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. இதன் மூலமாக ஆசியக் கோப்பை இறுதி ஆட்டத்திற்கு பாகிஸ்தான் அணி முன்னேறி இருக்கிறது. 19.5 ஓவரில் பாகிஸ்தான் வெற்றி உறுதியான போதே, அந்த அணி வீரர்கள் கொண்டாட தொடங்கிவிட்டனர்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles