பாகிஸ்தான் இனி ஒரு போட்டி கூட ஜெயிக்க கூடாது.. அப்போதான் இந்த நல்ல விஷயம் நடக்கும்.. கம்ரான் அகமல் அதிரடி.!

தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 13 வது உலகக்கோப்பையில் நேற்று சென்னையில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்தத் தோல்வியின் மூலம் அந்த அணி அரை விதி போட்டிக்கு தகுதி பெறுவதற்கு கடும் மக்கள் ஏற்பட்டிருக்கிறது.

- Advertisement -

இந்தப் போட்டிக்கு முன்பாக பாகிஸ்தான், இந்தியா ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுடன் தொடர்ச்சியாக மூன்று தோல்விகளை சந்தித்தது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா அணியுடன் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் நேற்று களம் இறங்கிய பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து 270 ரன்கள் ஆல் அவுட் ஆனது.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா பரபரப்பான போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணிக்கு 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இறுதி விக்கெட் பேட்ஸ்மேன்களான கேசவ் மகராஜ் மற்றும் சம்ஸி இருவரும் சிறப்பாக விளையாடி தென்னாப்பிரிக்க அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்

- Advertisement -

இந்த தோல்வியின் மூலம் ஏறக்குறைய பாகிஸ்தான் அணி உலக கோப்பையில் இருந்து வெளியேறும் சூழ்நிலையில் இருக்கிறது. இனி வரும் போட்டிகளில் அந்த அணி தொடர்ச்சியாக வெற்றி பெற்றாலும் நற்றானிகளின் வெற்றி மற்றும் தோல்விகளை பொறுத்தே பாகிஸ்தான் அணி அரை இறுதிக்கு செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். இன்னும் அந்த வாய்ப்புகளும் மிகக் குறைவான அளவில் இருக்கின்றன.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போது கிரிக்கெட் விமர்சகராக பணியாற்றி வரும் கம்ரான் அக்மல் அதிரடியான கருத்தை தெரிவித்திருக்கிறார். இந்தக் கருத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரங்களில் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

பாகிஸ்தான் அணியின் தொடர் தோல்விகள் குறித்து கருத்து தெரிவித்த அவர்” பாகிஸ்தான் அணி திறமையாக செயல்பட்டு கிரிக்கெட்டில் முன்னேற வேண்டும் என்றால் அவர்கள் உலகக் கோப்பையில் இனி வரும் ஒரு போட்டிகளில் வெல்லக்கூடாது. அப்போதுதான் நாம் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் முன்னேற்றத்தை பார்க்க முடியும்” என அதிரடியாக தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அந்த நிகழ்ச்சியின் நெறியாளர்” ஏன் இப்படி சொல்கிறீர்கள்.?என அதிர்ச்சியுடன் கேட்டு இருக்கிறார். மேலும் பாகிஸ்தான் அணி தோர்ப்பதை நம்மால் தாங்க முடியுமா.?எனவும் அவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய கம்ரான் ” இது வெற்றி தோல்வி பற்றியது அல்ல. அவர்களுக்கு இருக்கும் அகந்தை நீங்க வேண்டும் என்றால் அவர்கள் இனிவரும் போட்டிகளில் தோற்றால்தான் அதிலிருந்து படிப்பினை பெறுவார்கள்”என தெரிவித்தார் . இந்த வருட உலகக் கோப்பை போட்டிகளில் மிகுந்த எதிர்பார்ப்புடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி தற்போது அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுமா என்ற சந்தேகமான நிலையில் இருப்பது கிரிக்கெட் ரசிகர்களை வருத்தம் அடையச் செய்திருக்கிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles