துபாயில் நடைபெற்ற அண்டர் 19 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி 191 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளரான சர்ப்ராஸ் அஹமத் போட்டியின் போது இந்திய இளம் வீரர்களின் நடத்தை சரியில்லை என்று பல விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது ” இதற்கு முன்பு நான் இந்திய அணிக்கு எதிராக விளையாடி இருக்கிறேன். அப்போது இருந்த இந்திய வீரர்கள் விளையாட்டை மதித்தனர். ஆனால் இந்த ஆட்டத்தில் வெளியே அமர்ந்திருந்த போது இந்திய வீரர்களின் நடத்தை விளையாட்டுக்கு நல்லதல்ல என்பதையும் இந்திய அணியின் நடத்தை நெறியற்றது என்பதையும் உணர்ந்தேன். நாங்கள் வெற்றியை விளையாட்டு உணர்வோடு கொண்டாடினோம்.
அது இந்திய அணி செய்யாதது அவர்களின் நடத்தை செயல்” என்று பேசி இருக்கிறார். மேலும் இந்திய அணி வீரர்களின் இந்த முறையற்ற செயல்பாட்டை நாங்கள் பிசிசிஐயிடம் முறையிடுவோம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் தலைவர் மோசின் நக்வி கூறியிருக்கிறார். அதாவது இந்திய வீரர்கள் ஆயுஷ் மாத்ரே மற்றும் சூரியவன்சி ஆட்டம் இழந்து வெளியேறிய போது பாகிஸ்தான் பவுலரை வசை பாடியபடி வெளியேறினர். ஆனால் பாகிஸ்தான் வீரர்களின் நடத்தைக்கு தான் இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

