யாரு சாமி நீ.. 6 மாதம் முன்பே கேரி கிர்ஸ்டனுக்கு நடக்கப் போவதை சொன்ன ஹர்பஜன்.. தற்போது மீண்டும் ருசிகர பதிவு

ஆறு மாத கால கட்டத்துக்குள்ளே இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரும் பாகிஸ்தானின் தற்போதைய தலைமைப் பயிற்சியாளருமான கேரி கிர்ஸ்டன் பதவியை ராஜினாமம் செய்தார்.

- Advertisement -

அதிரடி முடிவை எடுத்த கேரி கிறிஸ்டன்:

தென்னாப்ரிக்காவைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரும் மற்றும் முன்னாள் இந்திய அணியின் பயிற்சியாளராகவும் இருந்தவர் கேரி கிறிஸ்டின். இவர் 2008 முதல் 2011 வரை இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்தார். கேரி கிறிஸ்டின் வழிகாட்டுதலின் பேரில் இந்திய அணி பல வெற்றிகளை குவித்துள்ளது. குறிப்பாக 2011 ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணிக்கு 28 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் உலக கோப்பை மற்றும் டெஸ்ட் தொடரில் டாப் 5 அணி என்ற பயிற்சியாளரின் பெருமைக்கு சொந்தக்காரர்.

- Advertisement -

டல்லாஸ் நகரில் நடந்த டி20 உலகக்கோப்பைத் தொடரின் 11வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி சூப்பர் ஓவரில் 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது அமெரிக்க அணி. இதனால், அதிருப்தி அடைந்த கேரி கிறிஸ்டன் 6 மாத காலகட்டத்திலேயே அதிரடி முடிவை எடுத்து தனது பதவியை ராஜினாமம் செய்துள்ளார்.

- Advertisement -

ஒற்றுமை இல்லாத அணி:

மேலும், கேரி கிறிஸ்டன் பேசியதாவது, “பாகிஸ்தான் அணியில் ஒற்றுமை என்பதே இல்லை. ஒற்றுமை இல்லாத இடத்தில் ஒரு அணியாக எப்படி செயல்பட முடியும்..? அது எப்படி ஒரு அணியாகும்..?. அவர்கள் ஒருவரையொருவர் ஆதரித்து அரவணைத்த செல்லவே இல்லை. அனைவரும் பிரிந்து, எதிரெதிர் திசையில் செல்கின்றனர். நான் பல அணிகளுடன் சேர்ந்து வேலை பார்த்துள்ளேன். ஆனால், நான் இப்படி ஒரு சூழ்நிலையை எந்த அணிகளிலும் பார்த்ததே இல்லை” என்று தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

நேரத்தை வீணடிக்காதீர்கள்….. ஹர்பஜன்சிங்:

இதைத்தொடர்ந்து, ஹர்பஜன்சிங்கும் “அங்கே உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள், கேரி. மீண்டும் டீம் இந்தியாவுக்கு பயிற்சியாளராக வாருங்கள்” என்று X தனது வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles